Monday, July 21, 2008

குவைத்தில் மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி

Bismillahir Rahmanir Raheem

"Kuwait Tamil Islamic Committee (K-Tic)" arranges
"The Grand Isra' / Mi'raj Conference in Tamil"

Kuwait Tamil Islamic Committee (K-Tic - Religious Social Welfare Organization of Tamil speaking Muslim community in Kuwait) is arranging "The Grand Isra' / Mi'raj Conference" for Tamil Community in Tamil.



Date:
Insha Allah July 25, 2008 Friday @ 4:00 pm (after Asar Prayer) upto 10:30 pm
Venue:
Kuwait, Hawally, Rehabilitation Center
(Opp. Al-Mass Hotel / Near Matha'm Kanari and Al-Bahr Complex)

Presided by Moulanaa Moulavee As-Shaikh Al-Haj T.P. Abdul Latheef Qasimi (President, K-Tic & Imam, Masjid Ukkasha, Jaleeb).
Speakers:
1. Moulavee Al-Hafiz Qari M. Muhammed Nizamuddeen Baqavee (Member, Fathwa Wing, K-Tic)
2. Moulavi Al-Hafiz Qari M.J.M. Ajwad Raivindhi Lahoori (Srilanka) (Member, Islamic Scholars Wing, K-Tic)
3. Moulavi Al-Hafiz Qari M. Mahboob Basha Rahsadi (Member, Workshop and Guidance Wing, K-Tic)
Brief Introduction of K-Tic and its Services:
Moulavee Afzalul Ulamaa A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary, K-Tic)
And also Kuwait Tamil Islamic Committee will publish "K-Tic Pirai News Letter (Saiythi Madal)" (The First free of cost Tamil Islamic Monthly Magazine in Kuwait) 'Mi'raj - Isra' Special' in this program. And also present the Islamic memorization from Holy Qur'an, Hadees, Dua, Dhikr and Kalima for children (in the age group of below 12 years) from 4:00 pm to 5:00 pm.
K-Tic cordially invites everyone to the conference with their families, relatives and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this program.
For more (Tamil / English) news, photos and our committee activities please visit our official website: www.k-tic.com and for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

For more details please contact:
Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee, Vice President - 77 38 420
Moulavee A.B. Khaleel Ahmed Baaqavee, General Secretary - 78 72 482
A. K. S. Abdul Nazar, Dy. Gen. Secretary - 94 30 786
H. Mohammed Nasar, Deputy Treasurer - 730 27 47
Emails : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Website : www.k-tic.com - Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group

Please read the following message / news by UNICODE font


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25-07-2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'ரிஹாபிலேஷன் சென்டர்' (அல்-மாஸ் உணவகம் எதிரில், மத்அம் கனாரீ / அல்-பஹ்ர் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி', ' அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் நடைபெற இருக்கின்றது. (மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து 5:00 மணி வரை குவைத்தில் வசிக்கும் 12 வயதுக்குட்பட்ட தமிழ் முஸ்லிம் குழந்தைகளின் திறமைகளை வெளிகொணரும் வகையில் திருக்குர்ஆன் ஸூரா (வசனங்கள்), கலிமா, ஹதீஸ் (நபிமொழி), துஆ (பிரார்த்தனை) மற்றும் திக்ர் (இறை நினைவு) ஒப்புவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும்).
சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் சொற்பொழிவு பயிலரங்கில் பயிற்சி பெற்ற இளம் பேச்சாளர்களின் சிற்றுரைகளைத் தொடர்ந்து, சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம்.ஜே.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரீ மற்றும் சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார். இன்ஷா அல்லாஹ் இச்சிறப்பு நிகழ்வில் சங்கத்தில் இணைந்து குவைத்தில் மார்க்கப் பணியாற்றும் தமிழ் ஆலிம் பெருமக்களின் சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். 2008ம் வருட மீலாது இஸ்லாமிய பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். சங்கத்தின் சார்பாக குவைத்திலிருந்து வெளியிடப்படும் முதல் இலவச இதழான 'பிறை செய்தி மடல்' பத்திரிகையின் 'இஸ்ரா மிஃராஜ் சிறப்பிதழ்' வெளியிடப்படும். துஆவுடன் நிகழ்ச்சி இன்ஷh அல்லாஹ் இனிதே நிறைவுபெறும்.
இச்சிறப்புமிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார்கள், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல்கள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

குறிப்பு :
இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments: