Tuesday, August 26, 2008

தஞ்சை சுன்னத் ஜமாஅத் மாநாட்டு தீர்மானங்கள்

தஞ்சை சுன்னத் ஜமாஅத் மாநாட்டு தீர்மானங்கள்
தகவல்: காயல்பட்டணத்திலிருந்து மாஸ்டர் கம்ப்;யுட்டர் அகடமி (?)

http://www.kayalpatnam.com/shownews.asp?id=2069


தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுன்னத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுன்னத் ஜமாஅத் மாநாட்டை ஹாஜா முஹ்யித்தீன் ரப்பானி தொடக்கி வைத்தார். தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் கண்காட்சி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3.5 சதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கிறோம்.

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் உள்ள நிர்வாகிகள் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற சட்டத்தை வக்ஃபு வாரியம் உடனடியாக அமுலுக்கு கொண்டு வர வேண்டும்.

பத்திரிகைகள், திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும். பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் பிரச்சினை ஏற்படுத்தி ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் முஸ்லிம் பெயர் தாங்கிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்.

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ஃபு வாரியத்தில் தர்கா நம்பிக்கை உள்ளவரையே தலைவராக நியமிக்க வேண்டும். இது தொடர்பாக தமழக முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் கல்விக்கென்று தனி அமைச்சகம் இருப்பது போன்று தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்விக்கும் மற்றும் சிறுபான்மையினர் நலத்துக்கும் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காவில் பணிபுரியும் உலமாக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உலமாக்கள் நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்.

உருது மொழிக்காக தனி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் 15 சத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தஞ்சை ஷேக் சிராஜுத்தீன், கே.எம்.பாரூக், காதர் உசேன் புகாரி, மேலை நாசர், எஸ்.எம். நாகூர் கனி, ஜான் அப்துல், பொருளாளர் முத்தலிபு, சூரத் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி : தினமணி (நெல்லை பதிப்பு)

நாள் : 25-08-2008

No comments: