Saturday, August 16, 2008

இஸ்லாமிய சமுதாயத்தினர் பாஸிட்டிவ் அரசியலில் ஈடுபட வேண்டும்

இஸ்லாமிய சமுதாயத்தினர் பாஸிட்டிவ் அரசியலில் ஈடுபட வேண்டும்


மதுரை, ஆக. 15: தங்களுக்கான உரிமையைப் பெற இஸ்லாமிய சமுதாயத்தினர் "பாஸிட்டிவ்' அரசியலில் ஈடுபட வேண்டும் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் இ.அபுபக்கர் சாகிப் பேசினார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை மனித நீதிப் பாசறை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

நாட்டின் சுதந்திரத்துக்காக இஸ்லாமியர் ஏராளமானோர் தங்களது இன்னுரைத் தந்துள்ளனர். ஆனால், அது மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைப் போக்கும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை பேணும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் இஸ்லாமிய சமுதாயத்தினர் "நெகடிவ்' அரசியலில் ஈடுபட்டனர். அதாவது, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசையும், தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவையும் ஆதரித்தனர்.

இனிமேல், பாஸிடிவ் அரசியலில் ஈடுபட வேண்டும். ஏனெனில், பிற்பட்ட யாதவ சமூகம் மற்றும் தலித் சமூகம் "பாஸிட்டிவ்' அரசியல் மூலம்தான் உயர்ந்துள்ளது.

மத்தியில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு மாயாவதி பெயரைக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை எட்ட இஸ்லாமிய சமுதாயமும் "பாஸிட்டிவ்' அரசியலில் ஈடுபடுவது அவசியம் என்றார்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080816001105&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/16/2008&dName=U%D5%FBW&Dist=4

No comments: