எண்ணெய் வாங்கலியோ.. எண்ணெய்!
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008
http://thatstamil.oneindia.in/editor-speaks/2008/11/21-oil-slips-below-50-dollar-per-barrel.html
-ஏ.கே.கான்
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயி்ன் விலை பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்குக் கீழே சரிந்துள்ளது.
உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோலியப் பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்துவிட்டதால் கச்சா எண்ணெய் விலை சரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், உண்மையில் இது மட்டும் காரணமில்லை. இதுவும் ஒரு காரணம், அவ்வளவு தான்.
எண்ணெய்க்கான டிமாண்ட் அப்படி ஒன்றும் ஒரேயடியாகக் குறைந்துவிடவில்லை என்பதே உண்மை. அதே போல எண்ணெய் உற்பத்தியும் அதிகரித்துவிடவில்லை.
50 டாலருக்குக் கீழே இருந்து வந்த கச்சா எண்ணெய்யின் விலையை சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனங்கள் தான் தேவையில்லாமல் ஏற்றிவிட்டு உலகையே அச்சத்தில் ஆழ்த்தின.
இப்போது இந்த நிறுவனங்கள் பொருளாதார சிக்கலில் மாட்டி விழி பிதுங்கிக் கொண்டுள்ளதால், பெட்ரோலியத்தை வைத்து இவர்கள் நடத்தி வந்த யூக வியாபாரமும் (speculative trading) படுத்துவிட்டது. இதனால் தான் பெட்ரோலியம் தனது ஒரிஜினல் விலைக்குத் திரும்பியுள்ளது.
பெட்ரோலிய நிறுவன பங்குகளில் காசைப் போடுங்கள் என்று இவர்கள் போட்ட கூச்சல் தான் அந்த நிறுவனங்களின் பங்கு விலையை அதிகரிக்க வைத்து கச்சா விலையையும் உயர்த்தின. இப்போது இவர்களது கூச்சலைக் கேட்க ஆள் இல்லை.
பங்குச் சந்தையில் போட்ட பணத்தில் மிச்ச சொச்சம் இருப்பதை முதலீட்டாளர்கள் திரும்ப எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், எல்லா நிறுவனங்களின் பங்குகளும் படுத்துவிட்டன. இதில், எண்ணெய் நிறுவன பங்குகளும் அடக்கம். இதனால் தான் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது.
இன்றைய நிலையில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 48.63 டாலருக்கு வந்துவிட்டது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்த விலை. இதைத் தான் பீப்பாய் ஒன்றுக்கு 160 டாலர் வரைக்கும் கொண்டு போய்விட்டனர் யூக வர்த்தக நிறுவனங்கள்.
விலை கூடும் வரை பெட்ரோலியத்தை ஸ்டோர் செய்யும் வேலைகளில் பெரிய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அமெரிக்காவின் மு்ன்னணி எண்ணெய் வர்த்தக நிறுவனமான கோஷ் (Koch), ராயல் டச்சு ஷெல் ஆகிய நிறுவனங்கள் சூப்பர் டேங்கர்கள் எனப்படும் மாபெரும் கப்பல்களை மாதக்கணக்கில் புக் செய்துள்ளன.
இதில் 10 மில்லியன் பீப்பாய் அளவுக்கு பெட்ரோலியத்தை சேமித்து வைக்க முடியும். இது நாளொன்றுக்கு உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடான செளதி அரேபியா சர்வதேச சந்தைக்கு வழக்கும் பெட்ரோலியத்தின் அளவை விட அதிகம்.
No comments:
Post a Comment