Tuesday, November 25, 2008

சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பவருக்கு பரிசு - தமிழக அரசு அறிவிப்பு

சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பவருக்கு பரிசு - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, நவ.25-

கம்ப்ïட்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் மென்பொருள்களில் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு `கணியன் பூங்குன்றனார்' பெயரில் பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன் அந்த நிறுவனத்துக்கு பாராட்டிதழ் வழங்கப்படும்.

இது தமிழ் வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருளாக இருக்க வேண்டும். தனியாளாகவோ, கூட்டு முயற்சியிலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்படலாம். கூட்டு முயற்சி என்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் பணமாக செலுத்தலாம். தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை என்ற பெயரில் டி.டி. எடுத்து அனுப்பலாம். அடுத்த மாதம் டிசம்பர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, எழும்பூர், ஆல்க சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். 044-28190412, 13 ஆகிய தொலைபேசி எண்களில் விவரங்களைக் கேட்கலாம்.

இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=452489&disdate=11/25/2008

No comments: