இளைஞர் முழக்கம் டிசம்பர் 2008 இதழ்
சட்டக்கல்லூரி: ரேஜீஸ்குமார்
மாறாக இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் வாரிசுகளாக தங்களை காட்டிக் கொள்ளும் இவர்கள் சட்டக் கல்வியில் இரட்டைக் கல்லூரி முறையையே கொண்டு வந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இண்டர்நெட் வசதி, சட்ட இதழ்கள் கொண்ட நூலகம், முழுநேர வகுப்பு, மாதிரி நீதிமன்றம் என எல்லாவித வசதிகளுடன் வசதிபடைத்த மேல்தட்டு மக்கள் மட்டுமே கல்வி பயிலும் பி.எல். ஹானர்ஸ் ஒரு புறம். எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் சட்டக் கல்லூரிகள் மறுபுறம் என இரண்டு விதமான சட்டக் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பெரியாரின் சீடர்கள்.
மும்பை மாலேகாவ்: கணேஷ்
கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகத்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான திருப்புமுனை சமீபத்தில் ஏற்பட்டது. பொதுவாக, ஒரு இடத்தில் குண்டு வெடித்தால் உடனேயே அது இஸ்லாமியர்கள்தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று பலரின் மனதில் விதைக்கப்பட்டு இருந்தது. இந்த வேலையை பெரும்பாலான ஊடகங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்தன. மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணை இந்துத்துவா அமைப்புகளை நோக்கி அழைத்துச் சென்றது. ஐதராபாத் மெக்கா மசூதி, கான்பூர், தென்காசி போன்ற இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் மட்டுமில்லாமல் சம்ஜோதா எக்ஸ்பிரசில் குண்டு வெடித்ததும் இவர்களின் கைங்கர்யம்தான் என்ற சதி அம்பலமானது.
வாஷிங்டன் நெருக்கடியும், வாடிப்பட்டி செல்வராசும் : க.சுவாமிநாதன்
சப் ப்ரைம் கடன்கள் என்றால் தகுதியற்ற கடன்கள் என்று புரிந்து கொள்ளலாம். நம்ம வங்கிகளில் கடன் வாங்குவதென்றால் இன்கம் சர்டிபிகேட் கொண்டுவா! ரேசன் கார்டு கொண்டுவா! சுயூரிட்டி யார்? அவர் வருமானம் என்ன? என்று குடைந்து விடுகிறார்கள் அல்லவா! ஆனால் அமெரிக்க வீட்டு வசதிக் கடன்கள் நிஞ்சாக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அதாவது வருமானம் இல்லை, வேலையில்லை, சொத்து இல்லை இவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கப் பட்டால் உருப்படுமா? இக்கடன்கள் வழங்கப்படுவதற்காக வட்டி விகிதங்கள் செயற்கையாகக் குறைக்கப்பட்டன. வீட்டுக் கட்டுமானத் தொழில் துவக்கத்தில் ஜாம் ...ஜாம்... என்று வளர்ந்தது. இது முதற்கட்டம்.
என்ன செய்யப்போகிறார் ஒபாமா? : எஸ்.வி.சசிக்குமார்
பொருளாதாரக் கொள்கையில் புஷ்ஷின் கொள்கையை ஒபாமாதான் ஏற்கவில்லை என்று சொல்லியிருந்தாலும் அவரது மாற்றுக் கொள்கை எப்படியிருக்குமென்று சூசகமாகக் கூட அவர் இதுவரை சுட்டிக்காட்டியதில்லை. அமெரிக்காவின் ஏகபோக வர்த்தக நிறுவனங்களின், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியோடு கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டுவரும் நாசகரக் கொள்கையான உலகமயமாக்கல் கொள்கையைக் கைவிடுவதற்கு, ஒபாமா தலைமையிலான அரசிற்கு என்ன மாற்றுக் கொள்கை இருக்கிறது என்பது புலப்படவில்லை. ஒபாமா அமெரிக்காவின் பொருளாதாரச் சிக்கலை எப்படித் தீர்த்து வைக்கப்போகிறார் என்பது இன்னமும் புரியாத புதிர்தான்.
நாங்கள் தகர்ப்போம் காரணம் நாங்கள் வலிமையானவர்கள்: ஏ.பாக்கியம்
பிரெஞ்ச் நாட்டு இளைய தலைமுறையை பற்றி எழுதுகிறபோது 1866இல் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: பாரிஸ் மாணவர்கள் குழப்பமான சூழலிலும், அவர்களது உரிமைகள் பறிபோகிற சூழலிலும் கூட தொழிலாளர் பக்கமே நின்றுள்ளனர் என்பது முக்கியமானது என்று மார்க்ஸ் எழுதுகிறார். 1865_-66ல் பாரிசில் அகடமி கல்லூரி மாணவர்களின் எழுச்சியையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பற்றியும் எழுதும்போது இக்கருத்தை வெளியிடுகிறார். இளம் இத்தாலியை போன்று இளம் பிரான்ஸ் ஒரே அமைப்பாக செயல்படவில்லை. பல அமைப்புகளாகவும் , பல கருத்தோட்டங்களை கொண்டதாகவும் அமைந்-திருந்தது. மூன்றுவிதமான முக்கிய பிரிவுகள் இளம் தலைமுறையினரிடம் காணப்பட்டது.
மேலும் படிக்க, http://dyfi.keetru.com
No comments:
Post a Comment