பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன
பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment