ஹிஜ்ரி 1429ம் வருடம் முடிந்து 1430ம் வருடம் துவங்குகிறது. இந் நேரத்தில் அனைவருக்கும் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் இப் புத்தாண்டில் அனைத்து வித பரக்கத்தையும் நமக்கு சொரிந்தருள்வானாக! கடந்த காலங்களில் செய்த தவறுகளை மன்னித்து இப் புத்தாண்டு முதல் தவறு செய்யாத வாழ்க்கையைத் தந்தருள்வானாக! ஆமீன்.
ஹிஜ்ரி வருடத்தை இஸ்லாமியர்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. சிலர் இது பற்றிய தகவல் முற்றிலும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்காக இது பற்றிய தகவல்களை அறியத் தருகிறோம்.
இஸ்லாமிய வருடம் எப்படி, எப்போது பிறந்தது?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மறைந்து கலீபாக்கள் ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்களுக்கென ஒரு ஆண்டை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஸஹாபாக்களை ஒன்று கூட்டி கலந்தாலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு ஸஹாபாக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். இறுதியில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இறைவனின் உத்திரவிற்கிணங்க தான் பிறந்த மக்காமா நகரை துறந்து மதினமா நகரம் சென்ற நிகழ்வு ( ஹிஜ்ரத் ) நடந்த வருடத்தை இஸ்லாமிய முதல் ஆண்டாக கணக்கில் எடுக்க வேண்டும் என்ற யோசனை சிறந்ததாக பட்டது. அதன்படி கணக்கில் எடுத்து இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி துவக்கப்பட்டது. இஸ்லாமிய மாதம் பிறையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு மாதத்துடைய மொத்த நாட்கள் 29 அல்லது 30.
இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:
முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா, துல்-ஹஜ்.
http://www.kayalpatnam.in/index.php?option=com_content&view=article&id=418:2008-12-27-194144&catid=1:latest-news&Itemid=194
No comments:
Post a Comment