Tuesday, December 30, 2008

பாலஸ்தீன பாலகனே

பாலஸ்தீன பாலகனே

நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால்

நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை

நெஞ்சில் சுமக்கிறாய்.

நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து



எத்துனை வேதனை நீ ஏற்றாயோ

என்னாள் குமுற இயலவில்லை

உன் நெந்சம் துளைத்த ரவைகள்

எம் இதயமும் தொலைத்ததடா



காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய்

காலம் உனக்கு விடை தந்து விட்டது

காயம் உனது ஆறி விட்டது

இதயமோ எமது?



படை பட்டாளங்களுக்கு முன்னால்

பாலஸ்தீனனை உன்னால் எறியப்படும்

கற்கள் எம்மாத்திரம் என நினைத்திருந்தேன்

கண்டு கொண்டு விட்டேன் உண்மையை



ஷைத்தானை கல்லால்தான் அடிக்க வேண்டும்

சுவனத்தின் சொந்தகாரனே

ஷஹிதாகி சாய்ந்தவனே

சின்னஞ்சிறு பாலகனே



உன் மரண செய்தி கேட்டு

அன்னை உனது இங்கு

இன்னும் இருந்திருந்தால்

எப்படி துடித்திருப்பாளோ



இன்னும் அதிகமாய் இந்த

இஸ்லாம் சமுதாயம் துடிக்கிறது

இம்மை துறந்த இலவளே

என்றாவது சந்திப்போம்

இல்லை, இல்லை

சுவனத்தில் சந்திப்போம்



முதுவை சல்மான், ரியாத்

No comments: