வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Tuesday, January 13, 2009
ஏழாம் ஆண்டில் இனிய திசைகள் !
ஏழாம் ஆண்டில் இனிய திசைகள் !
இறையருளால் உங்கள் இனிய திசைகள் இதழ் ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இஸ்லாமியத் தமிழ் இதழ்களிலேயே தனித்துவம் மிக்க இதழாக சமுதாய மேம்பாடு ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்ட இதழாக இனிய திசைகள் மணம் பரப்பி வருவதை அனைவரும் உணர்வார்கள்.
சமுதாயச் சேவையில் முற்றிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய திசைகள் அறிவுஜீவிகளுக்கானதல்ல, பாமர முஸ்லிம்களுக்கான தென்பதில் பெருமிதமும் பேருவகையும் பரவி நிற்கின்றன.
சமுதாயத்திற்கு அத்தியாவசிய உடனடித் தேவைகளாக இருக்கும் கல்வி, வேலைவாய்ப்புச் செய்திகளோடு அரசியல், ஆன்மீகம், இலக்கியம் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கூறி வழிகாட்டி வரும் இனிய திசைகள் கடந்த ஆறாண்டுகளாகப் பெரும் நஷ்டத்தையே அடைந்து வந்துள்ளது. அந்த நஷ்டத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் வகையில் இந்த இதழ் மூலம் தனிப்பிரதி ரூ.10 ஆண்டுச் சந்தா ரூ.120 மூன்றாண்டுச் சந்தா ரூ.350 ஐந்தாண்டுச் சந்தா ரூ.560 என்ற வகையில் விலையேற்றம் கொள்கிறது.
இனிய திசைகள் இதழை ஆதரித்து வரும் புரவலர்கள், விளம்பரதாரர்கள், சந்தாதாரர்கள் தங்களது ஆதிக்கத்தையும் ஊக்கத்தையும் தொடர்ந்து பெருக்கித் தந்துதவ நன்றியுணர்வோடு விழைகிறோம். இனிய திசைகள் எட்டுத் திசையெங்கும் பரவிட, தமிழகத்துப் பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் உங்கள் நேசத்திற்குரிய நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் சென்றுசேர நல்மனம் கொண்ட சமுதாய ஆர்வலர்கள் மற்றும் புரவலர்கள் தாங்களே சந்தா செலுத்திச் சமுதாயச் சேவையில் தங்களையும் இணைத்துக் கொள்ளப் பேரன்போடு அழைக்கின்றோம். 5,10,15,20 என்ற கணக்கில் ஒருவரே சந்தா செலுத்தி, விரும்பும் நிறுவனங்கள், மன்றங்கள், நூலகங்கள் மற்றும் நண்பர்கள் முகவரிகளைத் தெரியப்படுத்தினால் இனிய திசைகள் ஆங்காங்கே பரவும். எமது இதழியல் சேவையில் இனிதே தங்களது பங்களிப்பையும் தந்துதவுக.
புரவலர்கள், ஆர்வலர்கள், விளம்பரதாரகள், வாசகர்கள் அனைவருக்கும் ஏழாமாண்டின் இனிய தொடக்க நல் வாழ்த்துக்கள் நன்றியொடு.
ஆசிரியர் குழு
இனிய திசைகள் ஜனவரி 2009 மாத இதழ் தலையங்கத்திலிருந்து
இனிய திசைகள்
27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 044 24936115
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment