ஆணவம்
ஒரு நாட்டின் ராஜா முனிவரிடம் வரம் வாங்குவதற்காக காட்டுக்குச் சென்றார்.
தியானத்தில் இருந்த முனிவரிடம் ராஜா தன்னைப்பற்றி இவ்வாறு எடுத்துக் கூறினார்.
* நான் இந்த நாட்டின் ராஜா.
* நான் நிறைய பொருள் சேர்த்து வைத்துள்ளேன்.
* நான் சேர்த்து வைத்துள்ள தானியங்களால் தானியக் கிடங்குகள் நிறைந்து வழிகின்றன.
* நான் கவர்ந்து வந்துள்ள மற்ற நாட்டு அழகிகள் அந்தப்புரத்தில்
குவிந்து உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.
தியானத்தில் இருந்து கண் விழித்த முனிவர் "நான் செத்த பின் வா" கூறிவிட்டு மீண்டும்
தியானத்தில் ஆழ்ந்தார் . கோபமுற்ற ராஜா, நான் இந்த நாட்டின் ராஜா என்னை
அவமானப் படுத்துகிறாயா என்று கூறி தனது கத்தியைய் எடுத்தார்.
அப்போது முனிவர் இவ்வாறு கூறினார்.
'நான்' என்ற இறுமாப்பு அல்லது 'நான்' என்ற ஆணவம் செத்தபின்
என்னை வந்து பார் வரம் தருகிறேன்.
பொருள்:
* 'ஆணவம்' நிமிர்ந்து சென்று அடிவாங்குகிறது.
* 'ஞானம்' பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.
* 'நம்மிடம் ஏதுமில்லை' என்று நினைப்பது ஞானம்.
* 'நம்மைத் தவிர ஏதுமில்லை' எனறு நினைப்பது ஆணவம்.
* 'அறிவு குறைவானவர்களுக்கே' ஆணவம் வருகிறது.
நிறை குடங்கள் 'ஆணவம்' கொள்வதில்லை
ஆதலால்தான் என்றும் பெருமிதத்துடன் காணப்படுகிறார்கள்!
---------------
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
No comments:
Post a Comment