கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு
திருப்பூர், மார்ச் 28: திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்தும் கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
கோடையை முன்னிட்டு திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. "கோடையில் வீசிய தென்றல்' என்ற தலைப்பில் கவிதையை 1 பக்கம், 24 வரிகளுக்கு மிகாமல் 3 நகல்கள் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கவிதையுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஒரு சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டைகள் சேர்த்து அனுப்ப வேண்டும். கவிதையில் தனிமனிதரை விமர்சிப்பதும், அரசியல் கருத்துக்களும் இருக்கக் கூடாது. படைப்புகளை நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி, திருப்பூர் மக்கள் மாமன்றம், எழுத்தறிவாலயம், மங்கலம் சாலை, திருப்பூர். ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்ப வேண்டும் என்று அமைப்பின் தலைவர் சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment