Wednesday, May 13, 2009

மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

பேரா. ஆபிதீன் அவ‌ர்க‌ள் முனைவ‌ர் ப‌ட்ட‌ம் பெற்ற‌மைக்கு வாழ்த்துக்க‌ள்.

இதுபோன்ற‌ சாத‌னையாள‌ர்க‌ளை ச‌முதாய‌த்திற்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ ஈமான் டைம்ஸ் த‌யாராக‌ உள்ள‌து. உங்க‌ள் ப‌குதியில் இதுபோன்ற‌ சாத‌னையாள‌ர்க‌ள் இருப்பின் அவ‌ர்க‌ள் குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ளை த‌ந்து உத‌விட‌ கேட்டுக் கொள்கிறோம்.

பேரா. ஆபிதீன் அவ‌ர்க‌ள் இது போன்ற‌ ப‌ல‌ சாத‌னைக‌ளைப் புரிய‌ அவ‌ருக்கு abideen222270@yahoo.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌லுக்கு வாழ்த்துக‌ளை அனுப்பி உற்சாக‌ப்ப‌டுத்திட‌வும். Mobile : 9965892706

முதுவை ஹிதாய‌த்
ஈமான் டைம்ஸ்
துபாய்




மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம்

இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் .

கடலியல் தாவரங்களைப் பயன்படுத்தி ஆண்களுக்கான கருத்தடை சாதனம் மாத்திரை வடிவில்; தயாரிப்பதற்கான முயற்சியில் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்குட்பட்ட நாகர்கோவில், இராஜாக்கமங்களம் கடலியலியல் ஆராய்சி மையத்தில் பகுதிநேர மாணவராக பதிவுசெய்து கொண்டு ஆராய்சியை STUDIES ON THE IN VITRO HUMAN SPERM MOTILITY INHIBITING ACTIVITY OF MARINE HALOPHYTES AND IN VIVO TOXICOLOGICAL EVALUTION IN ALBINO MICE - என்ற தலைப்பில் தொடங்கினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வந்த ஆராய்சிகட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு சமீபத்தில் இதற்கான வைவா நாகர்கோவில் கடலியல் ஆராய்சி மையத்தில்; நடைபெற்றது. சுமார் 350 பல்கலைகழக ஆராய்சி மாணவர்கள் முன்னிலையில் , 3 மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த வைவா தேர்வின். இறுதியில் மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் சாமுவேல் பால்ராஜ் பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் முறைப்படி அறிவித்தார்;.

மேலும் இது குறித்து டாக்டர் பால்ராஜ் சாமுவேல் கூறும் போது , டாக்டர் ஆபிதீன் முடித்துள்ள இந்த ஆராய்சி இன்றைய காலகட்டத்தில் மிகவும் பயனள்ள ஓன்று. காரணம், இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்த பயன்தரும் வகையில் இவருடைய ஆராய்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஆபிதீனுடைய ஆராய்சி குறித்து அவர் மேலும் கூறும் போது , தற்காலிக கருத்தடை சாதனங்களைப் பொறுத்தவரை பெண்கள் மாத்திரமே அதிகம் உபயோகித்து வருகிறார்கள். இது வரை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் என்பது காண்டம் ஒன்றுதான். இந்த நிலையில் பெண்கள் உபயோகப்படுத்தும் மாத்திரை வடிவிலான பொருள்களை போல், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத வகையில் ஆண்களுக்கும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்,என்று குறிப்பிடுகிறார்.

இந்த ஆராய்சிபற்றி பேராசிரியர் ஆபிதீன் கூறுகையில், பொதுவாக பூமியில் காணப்படும் மருத்துவ குணமுடைய தாவரங்களை உபயோகித்து மருத்துவம் செய்யும்முறை மிகவும் பிரபலமாகி வருகிறது.. அதே வேளையில் கடல்களில் காணப்படும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது , பொதுவாக பூமியில் காணப்படும் தாவரங்களில் இரண்டு மூன்று தாவரங்களை ஒன்று சேர்த்து ஓரு நோய்க்கு மருந்நதாக கொடுப்பார்கள்; . ஆனால் கடலில் காணப்படும் ஒரே தாவரம் கூட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் ஆற்றல் உள்ளது என்ற உண்மை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என்றார்
.
துனது ஆராய்சிபற்றி பேராசிரியர் விவரிக்கையில், ஆண்களின் விந்தனுக்கள் வெளியேற்றப்பட்டு அது கருத்தரிக்கும்முன், வெளியேற்றப்பட்ட விந்தனுக்களின் இயக்கங்களை தடைசெய்வதன் மூலம் அது கருத்தரிக்கப்படுவதை தடுக்க முடியும். அதாவது அந்த நேரங்களில் வெளியேற்றப்படும் விந்தனுக்களின் செயல்பாட்டினை தற்காலிகமாக பக்கவிளைவுகள் இல்லாமல் தடுக்க வேண்டியது தான் ஆராய்சி என்கிறார்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை பிரதேசங்களிலிருந்து சுமார் என்பது வகையான பல்வேறுபட்ட கடல்வாழ் தாவரங்கள் சேகரிக்கப்;பட்டு அறிவியல் முறைப்படி பதப்படுத்தி அவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை தன்னார்வ தொண்டர்கள் மூலம் பெறப்பட்ட விந்தனுக்களில் சோதனை ( invitro test ) செய்யப்படட.து . இந்த சோதனை இந்திய அரசு சார்பாக மும்பையில் நடத்தப்படும் Indian Institute of Reproduction என்ற ஆராய்சி மையத்தில்; முறைப்படி செய்யப்பட்டது.. இந்த சோதனையின் முடிவில் , தேர்ந்தெடுக்கப்பட்ட என்பது தாவரங்களில் ஆறுவகையான கடல்தாவரங்கள் மட்டும் விந்தனுக்களின் செயல்பாட்டை பெருமளவு தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு வகைதாவரங்களை எலிகளைக் கொண்டு உள்;உடலினுள் ( invivo ) பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் , ஆறு வகைதாவரங்களில் ஓரு வகைதாவரம் மட்டும் அற்புதமான வகையில் விந்தனுக்களின் இயக்கத்தை பெரிதும் தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக இந்த வகை மருந்துகளை உபயோகிப்பதால் ஏற்படும் மனதியல் மற்றும் உடலியல் ரீதியான பக்கவிளைவுகள் குறித்து மதுரையில் உள்ள ஒரு பிரபல மருந்தியல் கல்லூரியில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் இந்த தாவரத்தை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனமாக மாத்திரை வடிவில் தயாரிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணியின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைக்கு பி.எச்.டி. என்னும் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. என்றார்.

மேலும் அடுத்த கட்டமாக , கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாவரத்தின் செயல்பாடு குறித்து விளக்கி அவை மாத்திரை வடிவிலான, ஆண்களுக்கான தற்காலிக கருத்தடைப் மாத்திரையாகத் தயாரிக்கப் மருந்தியல் கம்பெனிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும். அதற்கு முன்பாக இந்த தாவரத்தினை பேட்டர்ன் பண்ணுவதற்கான முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகிறார் ஆபிதீன். இந்த ஒட்டு மொத்த ஆய்வுப்பணியும் மணோன்மனிய பல்கலைக்கழக கடலியல் விஞ்ஞானி டாக்டர் ரவிக்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் , கடலியல் தாவரங்களிலிருந்து கரையான்களை கட்டுப்படுத்தும் ஆய்வு சம்மந்தமான கட்டுரையை , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , மலேசிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஆபிதீன் கலந்து கொண்டு சமர்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

abideen s


Syed Ibrahim
abideen222270@yahoo.com
MUTHUVAI HIDAYATH
dateThu, May 14, 2009 at 11:51 AM
subjectcongratulations

Dhua salam
Quite an impressive work. May Allah SWT Bless all your endeavours.
Congtaulations for the fine achievements -
Dr.Himanasyed, Singapore

No comments: