Wednesday, June 3, 2009

வாரியாருக்கு வாயடைப்பு

வாரியாருக்கு வாயடைப்பு


நான் திருவாரூ ரில் படித் துக் கொண்டி ருக் கும் போது எங்கள் ஊருக் குக் காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென் பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண் பர்களுடன் செல் வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர் கள், உருயிருள்ள ஒன் றையும் - மிருகங்க ளையோ, பறவைக ளையோ கொன்று மனிதன் சாப்பிடுவ தற்காக கடவுள் படைக் கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத் திற்கு கடவுள் என்ன உணவைப் படைத் தார் என அவரிடம் கேட்டேன்.

வாரியார் என்னை உட்காரும்படி அடக்கி விட்டு, தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண் போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்த பின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவ தில்லை. ஆனால், மனி தன் காய்கறிகளைத் தாராளமாக உண்ண லாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, நான் கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி?என்று கேட் டேன். மறுபடியும் என்னை அடக்கி உட் கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப் பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை.

- கலைஞர்
நன்றி;விடுதலை.

No comments: