மனித நேய மக்கள் கட்சி
மனித நேய மக்கள் கட்சி பற்றி நாம் இனி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்களின் ஆதரவாளர்களைத் தவிர, மஹல்லா ஜமாஅத்துகளில் வாழும் பெருவாரியான தமிழக முஸ்லிம்கள் மத்தியிலோ, அவர்களை வழிநடத்தும் ஆலிம்கள் மத்தியிலோ அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் மரியாதையும் இல்லை என்பதே யதார்த்தம். அவர்களைச் சமுதாயம் மிகத் துல்லியமாக அடையாளம் கண்டுவைத்துள்ளது. அதனால் அவர்கள் பருப்பு வேகாது.
வாழ்நாளில் தொப்பியே போட்டுப் பழக்கமில்லாத மமக மத்திய சென்னை வேட்பாளர் திரு ஹைதர் அலி தேர்தல் பிரச்சாரத்தின்போது குல்லா அணிந்து கோயில் பூசாரியிடமும், சர்ச் பாதிரியிடமும் வாக்கு கேட்ட புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாயின. அதேநேரம் ஒரு பள்ளிவாசல் இமாமிடம் சென்று அவரால் வாக்கு கேட்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. சமுதாயத்திற்கும், அவர்களுக்கும் எவ்வளவு தூரம் என்பதை அனைவரும் புரிந்தால் சரி.
ராஸிக் அலி, பெரம்பூர், சென்னை
மமக திமுகவிடம் எதிர்பார்த்த சீட் கிடைக்காததாலும் அதிமுகவிடமிருந்து அழைப்பு வராததாலும் தனித்துக் களமிறங்கியது. ஒரே குடும்பமாக வாழ்ந்த தமிழக முஸ்லிம்களைக் கொள்கையின் பெயரால் பல கூறுகளாகப் பிரித்து சமூக ஒற்றுமையை சீர்குலைத்த அவர்களின் சுயரூபத்தை தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திவிட்டன. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உலமாக்கள் மட்டுமல்ல. அப்பாவி முஸ்லிம்களும்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஹாபிழ் அ. முஹம்மது ஆரிப், தக்கோலம், வேலூர்
நன்றி : சமநிலைச் சமுதாயம்
ஜுன் 2009
No comments:
Post a Comment