Thursday, March 18, 2010

இஸ்லாமிய வரலற்றில் இந்த மாதம்: ரபீவுல் ஆகிர்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இஸ்லாமிய வரலற்றில் இந்த மாதம்: ரபீவுல் ஆகிர்

நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்துக் கூறிய சமயத்தில் இந்த ரபீவுல் ஆகிர் மாதத்தில் நிகழ்ந்த சில வரலாற்று நிகழ்வுகள்.

பஹ்ரான் யுத்தம். இதை நஜ்ரான் யுத்தம் என்றும் சொல்லப்படுகிறது. பத்ரு யுத்ததிற்கும் உஹது யுத்ததிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரைஷிகளையும், பனூ சுலைம் கூட்டத்தினரையும் எச்சரிப்பதற்காக நயகம் (ஸல்) அவர்கள் படையுடன் சென்று “பஹ்ரான்” என்ற இடத்தில் இந்த மாதம் முழுவதும் தங்கினார்கள். யுத்தம் நடை பெறவில்லை. மீண்டும் மதீனா திரும்பினார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரபீவுல் அகிர் மாதம் நடந்தது.

மதீனாவிலுள்ள பனூ நழீர் கூட்டத்தைச் சேர்ந்த யூதர்கள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்ய முயற்சி செய்தனர். யூதர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் நபியவர்களுக்கு அறிவித்து காப்பாற்றினான். இந்நிகழ்வு ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடந்தது.

ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படை பனூ சுலைம் கூட்டத்தினரிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்களிடம் போரிட்ட இஸ்லாமிய படையினர் சிலரை கைதிகளாக்கினர். ஒட்டகம் ஆடு போன்ற கால்நடைகளை கனீமத்தாக (வெற்றிப்பொருளாக) எடுத்து வந்தனர். இந்நிகழ்வு ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடந்தது.

அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை “துல்கஸ்ஸா” என்ற இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். எதிரிகளில்ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பிவிட்டனர். அவர்களின் கால்நடைகள் வெற்றிப் பொருளாக கிடைத்தது. இந்நிகழ்வும் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடைபெற்றது.


தொகுப்பு: மவ்லவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவூதி, Dubai ( 055 976 4994 )

No comments: