பொறுமை
மேலும், பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்)
நீங்கள் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது உள்ளச்சம் உள்ளவர்கேயன்றி (மற்றவருக்குப்)
பெரும் பாரமாகவே இருக்கும்.
2 : 45 - அல்-குர்ஆன்
முஹ்மின்களே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்)
நீங்கள் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
2 : 153 - அல்-குர்ஆன்
(முஹ்மின்களே!) ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்கங்கள்
ஆகியவற்றின் நஷ்டத்தாலும் திண்ணமாக நாம் உங்களை சோதிப்போம்; (நபியே!
இச்சோதனைகளில்) போருமையாளர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக.
2 : 155 - அல்-குர்ஆன்
(போருமையாளர்காகிய) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம்
ஏற்பட்டால் "இன்னா லில்லாகி வ இன்னா இலைகி ராஜிஊன்" ("நிச்சயமாக நாம்
அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம்; நிச்சயமாக அவன் பக்கமே திரும்பி
செல்பவர்களாகவுமிருக்கிறோம்") என்று கூறுவார்கள்.
2 : 156 - அல்-குர்ஆன்
உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், (வேதக்காரர்களில் முனாபிக்குகளாயிருக்கும்) அவர்களுக்கு
அது துக்கத்தை உண்டாக்குகிறது ; உங்களுக்கு ஒரு தீமை ஏற்பட்டால், அதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சி
அடைகின்றனர் ; நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவர்களுடைய சூழ்ச்சி
உங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைச் சூழ்ந்து
அறிகிறவனாக இருக்கிறான்.
3 : 120 - அல்-குர்ஆன்
ஆம்! நீங்கள் பொறுமையாகவும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் நடந்து கொண்டால், அப்(பகை)வர்கள்
உங்களிடம் இக்கணமே வந்தாலும் (போர்) அடையாளமுள்ள ஐயாயிரம் மலக்குகளைக் கொண்டு
உங்களுடைய ரப்பு உங்களுக்கு உதவி செய்வான்.
3 : 125 - அல்-குர்ஆன்
(முஹ்மின்களே) உங்களின் பொருட்களிலும், உங்களின் ஆத்மாக்களிலும் திண்ணமாக நீங்கள்
சோதிக்கப்படுவீர்கள்; இன்னும், உங்களுக்கு முன் வேதங்கோடுக்கப்பட்டவர்களிலிருந்தும், இணைவைத்து
வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றை திண்ணமாக நீங்கள் செவிமடுப்பீர்கள்;
நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, பயபக்தியுடன் இருந்தீர்களானால்- நிச்சயமாக அதுவே
காரியங்களில் உறுதியானதில் நின்றுமுள்ளதாகும்.
3 : 186 - அல்-குர்ஆன்
முஹ்மின்ஹளே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்;
(ஒருவரையொருவர்) பலப்படுதிக்கொள்ளுங்கள் - நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை
அஞ்சிக்கொள்ளுங்கள்.
3 : 200 - அல்-குர்ஆன்
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் கீழ்ப்படியுங்கள்; (உங்களுக்கிடையே) நீங்கள் பிணங்கி
(தர்கித்து)க் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்தால்) நீங்கள் கோழையாகி விடுவீர்கள் - உங்களுடைய ஆற்றல்
போய்விடும்; நீங்கள்பொறுமையாகவும் இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
8 : 46 - அல்-குர்ஆன்
No comments:
Post a Comment