பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?
பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்ப தில்லை.
பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட் டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.
பழங்களை எப்படி, எப்போது உண்ண வேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன?
நாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம் பழம், பப்பாசி பழம் அல்லது ஆப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு வேளைக்குப் பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது.
பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.
நீங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டுப் பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக் கூடும். ஆனால், அப்பழத்துண்டு அவ்வாறு செல்ல முடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில், பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு சமபாடடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். அதாவது பாண் துண்டு சமபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத் துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.
நீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகி விடும்.
No comments:
Post a Comment