கசப்பான உண்மைகள்
"கசப்பாக இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்கள்"
ஆனாலும்.....
மனிதர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்
நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்
நீங்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருங்கள்
நீங்கள் பல வருடங்கள் சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்
நீங்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்
நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய் இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்
நீங்கள் ஒருவருக்குக் கடன் கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு கடன் கொடுத்து உதவுங்கள்
நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்
உங்களிடம் இருப்பதில் சிறந்ததை மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்
கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(புனித குர்ஆன் 55:60)
No comments:
Post a Comment