Sunday, June 27, 2010

நேர்முக தேர்வி(Interview)ல் வெற்றி பெற தேவையான முக்கிய அம்சங்கள்

நேர்முக தேர்வி(Interview)ல் வெற்றி பெற தேவையான முக்கிய அம்சங்கள்

அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற எழுத்துதேர்வு மட்டுமன்றி Interview நேர்முக தேர்வு மற்றும் Group Discussion குழு விவாதம் ஆகியவற்றையும் சந்தித்தாக வேண்டும். வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமின்றி M.B.A போன்ற உயர் கல்வி படிப்பில் சேரவும் நேர்முக தேர்வு மற்றும் குழு விவாதம் தேவைபடுகிறது.
நவீன நிறுவனங்கள், தங்களது தேர்வு அமைப்பைப் பயன்படுத்தி தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது அல்லது இதற்கெனவே இருக்கும் தனியார் அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவது. இதில் எந்த முறையானாலும் தகுதியான, திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய கீழ்காணும் நான்கு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
1. கல்வி தகுதி
2. எழுத்துத் தேர்வு
3. குழுவிவாதம்
4. நேர்முகத் தேர்வு
முதல் கட்டம்: விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, அவர் விண்ணப்பம் அனுப்பி இருக்கும் முறை, அதில் பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள், கடித வாசகங்களை எழுதி இருக்கும் முறை, கல்வி தவிர முன் அனுபவம், மற்றும் பிற துறைகளில் இருக்கும் திறமை போன்றவைகளை அடிப்படையாக வைத்து அந்த நபரின் விண்ணப்பத்தை தேர்வு செய்வது.

இரண்டாவது கட்டமான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரின் கல்வித்திறன் சோதித்து அறியப்படுகிறது.

முன்றாவதாக குழுவிவாதம் மூலம் அந்த நபரின் அறிவுத்திறன், குழுவாக செயல்படும் திறன், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுதல் செயல்படுதல் போன்ற திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரரின் பிற குணங்களை அறிய உதவுகிறது.
நேர்முகத்தேர்வின் போது பொதுவாக ஐந்து முக்கிய அம்சங்களை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அவை 1.தனித்திறமைகள் 2. தலைமைப் பண்பு திறமை 3.தொழில்நுட்பம், கல்வி மற்றும் பணித்திறன் 4. பொது விஷயங்களில் ஆர்வம் 5.தனிப்பட்ட குணாதிசயங்கள்
இந்த ஐந்து அம்சங்களும் நிறைந்தவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே தேர்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த குணங்களும் திறமைகளும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும், பொதுவான விபரங்கள் குறித்து பேசுவதன் மூலமும்தான் அறிய முடியும். இந்த வழி முறையைப் பின்பற்றித்தான் ஒருவரிடம் என்ன திறமைகள் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

எனவே அதற்கு ஏற்ப நேர்முக தேர்வில் கலந்து கொள்பவர்களும் செயல்பட்டு தங்களது அனைத்துத் திறமைகளையும் தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல் படுவது மிக அவசியம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, நமது உற்சாகமான மன நிலையும், கலகலப்பானப் பேச்சுத் திறமையும், நமது கண்ணியமான உடல் அசைவுகளும் நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தேர்வாளர்கள் மனதில் தேற்றுவிக்க வேண்டும். அப்போது தான் ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் நாம் தனித்து தெரிவோம். இதன் மூலம் வெற்றியும் நம்மைத் தேடி வரும்.


A.Kader Mohideen,
Director
CSC Computer Education
MUDUKULATHUR
Email : kader.cworld@gmail.com Phone : 9443443834

No comments: