Tuesday, August 10, 2010

நோன்பு - சில குறள்கள்.

நோன்பு - சில குறள்கள்.

1).
நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்.
2).
ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப
(து) அறிவு.
3).
வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு
.
4). வல்லோன் வழங்கிய வாய்ப்பாம் ரமளானை
நல்லோரே பேணுவர் நம்பு
.
5).
புலன்கள் அடக்கும் பயிற்சிகள் தந்து
நலம்பல செய்வதாம் நோன்பு
.
6).
மாதம் இதனில் முழுமைப் பயிற்சியில்
மீதமுள்ள காலமும் மீட்பு
.
7).
பொய்யும் புறமுமாய் பேச்சிருப்பின், நோன்பென்று
மெய்வருந்தச் செய்வது வீண்
.
8).
ஆயிரம் மாதபலன் அற்புத ஓரிரவில்
தூயநன் நோன்பிலே துய்ப்பு
.
9).
ஈகைப் பரிசை இறையிடமே பெற்றிடவே
வாகை ரமளானிற் வாய்ப்பு
.
10).
இறைவனின் பார்வையில் யாவுமே 'உள்'ளில்
நிறைவாய் உரைத்திடும் நோன்பு
.


இப்னு ஹம்துன்

1 comment:

இப்னு ஹம்துன் said...

அன்பின் முதுவை ஹிதாயத்,

நோன்பு-சில குறள்கள் என்கிற என் ஆக்கத்தை பதிவிட்டதற்கு நன்றி. மகிழ்ச்சி.

என்பெயரையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.