ஊனம் தடையில்லை
நமது உடலில் இருக்கின்ற குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத் துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன. உதாரணமாக, இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு என்றும் ‘சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம். உதாரணமாக,
சாண்டோ எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம்! மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற பெயரையும் பெற்றார்.
உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை. மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தன்னுடைய மனதையும், உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’ என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’ என்கிற பெயரைப் பெற்றார்.
ஆனெட் கெல்லர்மேன் – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள் விரும்பினாள். பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மனஉறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’ செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.
பீதோவன் சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.
கவிஞர் மில்டன் – ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.
ஃபிராங்க்ளின் ரூஸ் வெஸ்ட் – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
ராபர்ட் லூயி ஸ் ஸ்டீபென்சன் - ஒரு மணி நேரம் கூட இருமலில் இருந்தும், நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி படைத்தார்.
எடிசன் தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல, நாமும் தொடர்ந்து முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான் சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.
இவர்கள் யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.
“முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை”.
No comments:
Post a Comment