Sunday, September 26, 2010

பரிந்துப்பேச உனையன்றி .

பரிந்துப்பேச உனையன்றி .

வழிமேல் விழிவைத்துக்
காத்திருந்தாலும்
வலி மட்டுமே மிஞ்சும்;
உன் நினைவுகள் எப்போதும் கெஞ்சும்!

ஒருமாத விடுப்பில்
ஒய்யாரமாய் வந்தாய்;
மணம் முடித்தாய்
கனம் கொடுத்தாய்;
கடல் தாண்டினாய்!

புதுமுகமாய் எல்லோரும்
உன் வீட்டில் -என்
புத்தம் புது ஆடைகளெல்லாம்
எனைப் பார்க்க வந்த
உன் உறவினருக்காக!

முதல் மாதத்தில் கேட்டேன்
எப்போது திரும்புவாய் என்று;
சிரித்தாய்;
மறு மாதத்தில் கேட்டேன்
புன்னகைத்தாய்;
மற்றொரு முறைக் கேட்டேன்
கடுகடுத்தாய்!

புரியாத எனக்கு
புதிராகவே இருந்தது;
மனம் கனமாக இருந்தது!

பரிந்துப்பேச உனையன்றி
யாருமில்லை எனக்கு;
புரிந்துக் கொண்டு
புறப்பட்டுவா அன்புக்
கட்டளையிடுகிறேன் உனக்கு!

இப்படி
மணம் முடித்து
மனம் கொடுத்து
தனம் எடுக்க
வனம் இருந்து
வாழ்வதற்கு
வந்துவிடு இங்கே!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

No comments: