Showing posts with label க‌ண்காட்சி. Show all posts
Showing posts with label க‌ண்காட்சி. Show all posts

Sunday, April 18, 2010

துபாயில் ஜுன் மாத‌ம் இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி

துபாயில் ஜுன் மாத‌ம் இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி

துபாய் : துபாயில் ஜும் மாத‌ம் 8 ஆம் தேதி முத‌ல் 10 ஆம் தேதி வ‌ரை இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி துபாய் இண்ட‌ர்நேஷ‌ன‌ல் க‌ன்வென்ஷ‌ன் & எக்ஸிபிஷன் சென்ட‌ரில் ந‌டைபெற‌ இருப்ப‌தாக‌ இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ச‌ஞ்ச‌ய் வ‌ர்மா செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார். இத‌னை பெட‌ரேஷ‌ன் ஆஃப் இந்திய‌ன் எக்ஸ்போர்ட்ஸ் ஆர்க‌னைசேஷ‌ன் ஏற்பாடு செய்துள்ள‌து. இதில் 250 பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்க‌ இருக்கின்ற‌ன‌.

இந்நிக‌ழ்வினை நிதிய‌ வ‌ர்த்த‌க‌ அமைச்ச‌ர் ஆன‌ந்த் ச‌ர்மா துவ‌க்கி வைக்கிறார். இக்க‌ண்காட்சியில் வீட்டு உப‌யோக‌ப்பொருட்க‌ள், அன்ப‌ளிப்பு பொருட்க‌ள், பேஷ‌ன், கார்மெண்ட்ஸ், உண‌வுப் பொருட்க‌ள், என்ஜினிய‌ரிங், ஆட்டோ பாக‌ங்க‌ள், த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு துறைக‌ளிலான‌ பொருட்க‌ள் க‌ண்காட்சியில் இட‌ம்பெறும்.

Monday, April 6, 2009

துபாயில் ச‌ர்வ‌தேச‌ ம‌ருத்துவ‌ க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் க‌ண்காட்சி

துபாயில் ச‌ர்வ‌தேச‌ ம‌ருத்துவ‌ க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் க‌ண்காட்சி

துபாயில் ச‌ர்வ‌தேச‌ ம‌ருத்துவ‌ க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் க‌ண்காட்சி 2009 ஏப்ர‌ல் 7 முத‌ல் 9 வ‌ரை துபாய் ச‌ர்வ‌தேச‌ க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் ம‌ருத்துவ‌த்துறை குறித்த‌ ப‌ல்வேறு அறிஞ‌ர்க‌ளின் கருத்துரைக‌ள், ம‌ருத்துவ‌ உப‌க‌ர‌ண‌ நிறுவ‌ன‌ங்க்ளின் க‌ண்காட்சி, இர‌த்த‌ வ‌ங்கி குறித்த‌ விப‌ர‌ங்க‌ள் உள்ளிட்ட‌வை இட‌ம்பெறும்.

மேல‌திக‌ விபர‌ம‌றிய‌ உத‌வும் இணைய‌த்த‌ள‌ம் www.imd.ae