Showing posts with label க‌விக்கோ. Show all posts
Showing posts with label க‌விக்கோ. Show all posts

Saturday, November 15, 2008

துபாய் ப‌ய‌ண‌மாகும் க‌விக்கோ

துபாய் ப‌ய‌ண‌மாகும் க‌விக்கோ

திங‌க‌ள‌ன்று ( 17 ந‌வ‌ம்ப‌ர் 2008 ) துபாய் ப‌ய‌ண‌மாகிறார் க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மான். அவ‌ருட‌ன் தேசிய‌ ஒருமைப்பாட்டுக் க‌ழ‌க‌ த‌லைவ‌ரும், அகில‌ இந்திய‌ காங்கிர‌ஸ் க‌மிட்டியின் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகியுமான‌ எஸ்.எம். இதாய‌த்துல்லாவும் ப‌ய‌ண‌மாகிறார்.

துபாயில் க‌ல்வி விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சிக்காக‌ செல்லும் அவ‌ர்க‌ள் அபுதாபி அய்மான் அமைப்பு ஏற்பாடு செய்யும் நிக‌ழ்ச்சியில் புத‌ன‌ன்றும் ( 19 ந‌வ‌ம்ப‌ர் 2008 ), துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் நிக‌ழ்ச்சியில் வியாழ‌னன்றும் ( 20 ந‌வ‌ம்ப‌ர் 2008 )ப‌ங்கேற்கின்ற‌ன‌ர்.


இந்நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை முத்துப்பேட்டை அப்துல் ர‌ஹ்மான், குத்தால‌ம் லியாக்க‌த் அலி, கீழக்க‌ரை சீனாதானா, கீழ‌க்க‌ரை காத‌ர் ப‌க்ஸ் ஹுசைன் சித்திக்கீ, முதுவை ஹிதாய‌த், கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் உள்ளிட்டோர் செய்து வ‌ருகின்ற‌ன‌ர். மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ 050 2533712 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொள்ள‌லாம். muduvaihidayath@gmail.com எனும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரியிலும் தொட‌ர்பு கொள்ள‌லாம்.