Showing posts with label மாத‌ இத‌ழ். Show all posts
Showing posts with label மாத‌ இத‌ழ். Show all posts

Friday, July 23, 2010

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ்

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ்

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ் விஞ்ஞான‌ ஆய்வுக‌ளைத் த‌மிழில் கொணர்ந்து த‌மிழுக்கு ஆக்க‌ம் சேர்ப்ப‌தைக் குறிக்கோளாக‌க் கொண்டு த‌வ‌த்திரு குன்ற‌க்குடி அடிக‌ளார் அவ‌ர்க‌ளால் தொட‌ங்க‌ப்பெற்று வெளியிட‌ப்பெறுவ‌து.

த‌மிழ் ம‌க்க‌ளிடையே விஞ்ஞான‌க் க‌ருத்துக்க‌ளை எடுத்துச் செல்லும் அறிவிய‌ல் த‌மிழ்த் தூதுவ‌னாக‌ப் ப‌ணி செய்து வ‌ருவ‌து. விஞ்ஞானிக‌ள் ப‌ல‌ரின் அரிய‌ அறிவிய‌ல் த‌மிழ்க் க‌ட்டுர‌க‌ளைத் தாங்கி அறிவொளி ப‌ர‌ப்பி வ‌ருவ‌து.

சுதேசி விஞ்ஞான‌ இய‌க்க‌ம், மைய‌மின் வேதியிய‌ல் ஆய்வ‌க‌ வ‌ளாக‌ம், காரைக்குடியின் ஆத‌ர‌வில் வெளிவ‌ருகிற‌து.

த‌ற்போதைய‌ நிர்வாக‌ ஆசிரிய‌ர் த‌வ‌த்திரு குன்ற‌க்குடி பொன்ன‌ம்ப‌ல‌ அடிக‌ளார்.
ஆசிரிய‌ர் முனைவ‌ர் மி. நோய‌ல்

அறிக‌ அறிவிய‌ல், த‌மிழ‌க‌ அறிவிய‌ல் வ‌ர‌லாறு, புதிய‌ ஆய்வு முடிவுக‌ள், ப‌ய‌னுள்ள‌ தொழில்நுட்ப‌க் க‌ண்டுபிடிப்புக‌ள் அறிவிய‌ல் க‌லைச் சொல்லாக்க‌ம் போன்ற‌ புதிய‌ ப‌குதிக‌ளுக்கான‌ க‌ட்டுரைக‌ளை வ‌ர‌வேற்கிற‌து.

க‌ட்டுரைக‌ள் அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி :

முனைவ‌ர் மி. நோய‌ல்
ஆசிரிய‌ர்
அறிக‌ அறிவிய‌ல்
மைய‌மின் வேதி ஆய்வ‌க‌ம்
காரைக்குடி 630 006

த‌னி இத‌ழ் ரூ. 6
ஆண்டுச் ச‌ந்தா ரூ. 70
ஆயுள் ச‌ந்தா ரூ. 700

தொட‌ர்பு முக‌வ‌ரி :

நிர்வாக‌ ஆசிரிய‌ர்
அறிக‌ அறிவிய‌ல்
குன்ற‌க்குடி 630 206
சிவ‌க‌ங்கை மாவ‌ட்ட‌ம்
போன் : 04577 264 166

Thursday, May 21, 2009

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

“தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ்.

“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற நபிவழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.

தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.

முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறோம்.

வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப்படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம். இதயம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்
158 லாயிட்ஸ் சாலை
கோபால‌புர‌ம்
சென்னை 600 086
தொலைபேசி : 044 4210 5352
மின்ன‌ஞ்ச‌ல் : samaurimai@gmal.com

ம‌திப்புரை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்
முதுவைக் கவிஞர்
மவ்லவி அ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பஇ