பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்
ரமழான்
குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், இன்னும் நேர்வழியிலிருந்தும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது; எனவே எவர் உங்களில் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். குர் ஆன் (2;185)
குர்ஆன் ஓதவும் அதன் பொருள் விளங்கி ஆராய்ந்து பார்க்கவும் இறைவன் மனித சமுதாயத்திற்கு கட்டளையிட்டுள்ளான். இதன் மூலம் மனிதனின் அறியாமை எனும் இருள் நீங்கி சத்தியம், நேர்வழி என்ற ஒளியை பெற்றுக் கொள்கின்றான்.மேலும் குர்ஆனை யார் கண்டு கொள்ளவில்லையோ,அவர்களைப் பற்றியும் இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்
உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குறிய) பல ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்துப்) பார்க்கின்றானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நான் உங்களைப் பாதுகாப்பவன் அல்ல" (என்று கூறுங்கள்). குர்ஆன் (6;104)
குர்ஆனின் ஞானம் ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்திலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத உள்ளத்தை பாழடைந்த வீட்டிற்கு ஒப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:"குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவராவார். (திர்மிதி)
மேலும் ரமழான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதவும், தான தர்மங்களை அதிகப்படுத்தவும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மக்களில் அதிகமாகக் கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்களைச் சந்திக்கும் புனித ரமழானில் மிக அதிகமாக கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழானில் ஒவ்வொரு இரவிலும் நாயகத்தைச் சந்திப்பார்கள், குர்ஆனை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பார்கள். ஜிப்ரீல் சந்திக்கும் புனித ரமழானில் வேகமாக வீசும் காற்றை விட அதிகமாகக் கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி_முஸ்லிம்)
முக்கிய நிகழ்வுகள்
வஹி(இறைச்செய்தி)யின் துவக்கம்:
மகத்துவமிக்க இந்த மாதத்திலே தான் மனிதகுலம் பெருமையடையும் வகையில் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கும், இருளிலிருந்து பேரொளிக்கும், இறைநிராகரிப்பிலிருந்து ஈமானுக்கும் மனித சமுதாயத்தை திருப்பி இவ்வுலகிலும் மறு உலகிலும் அவர்கள் ஈடேற்றம் பெறக்காரணமான வஹியின் துவக்கம் புனித ரமழானில் தான் ஆரம்பமானது.
புனித ரமழான் மாதத்தில் மக்காவிலுள்ள ஹிரா குகையில் நபி(ஸல்) அவர்களை ஜிப்ரீல்(அலை) அவர்கள் சந்தித்து இறைவன் அருளிய திருக்குர்ஆனின்.....
1.(நபியே!) உம்முடைய ரப்பின் திருப்பெயரைக் கொண்டு
ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் . (அனைத்தையும்) படைத்தவன்.
2. மனிதர்களை இரத்தக்கட்டியிலிருந்து அவன் தான்
. படைத்தான்.
3. ஓதுவீராக! உம்முடைய ரப்பு மிக்க தயாளமானவன்.
4. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான்.
5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றை(யெல்லாம்) அவன் . கற்றுக்கொடுத்தான். குர்ஆன்(96;1 முதல் 5)
என்ற இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள். இதற்குபின் இஸ்லாத்தின் ஏகத்துவப் பிரச்சார அழைப்பு ஆரம்பமானது. இந்நிகழ்வு நபித்துவத்தின் முதலாம் ஆண்டு ரமழான்_17 அன்று (ஹிஜ்ரத்திற்கு 13 வருடங்களுக்கு முன், கி.பி.610 ஜூலை இல்) நிகழ்ந்தது.
லைலத்துல் கத்ரு:
இம்மாதத்தில் லைலத்துல் கத்ரு இரவில் தான் புனித குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முதல் வானத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்டது. பின் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருபத்து மூன்று வருடங்களில் சிறிது சிறிதாக,முதல் வானத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) மூலம் அருளப்பட்டது.
"(லைலத்துல் கத்ரு என்னும்) கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்தது" குர்ஆன் (97;3)
நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் லைலத்துல் கத்ரு இரவில் ஈமானுடன் நற்கூலியை ஆதரவு வைத்தவராக நின்று வணங்குகிறாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)
கதீஜா(ரழி)அவர்களின் வஃபாத்:
அன்னை கதீஜா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் ஏகத்துவ அழைப்பை முதன் முதலாக ஏற்று ஈமான் கொண்டவர்களில் பெண்களில் முதலாமவர் ஆவார்கள். அவர்களின் வஃபாத் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு (ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்) ரமழான் மாதத்தில் நிகழ்ந்தது.
பத்ரு யுத்தம்:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் பிறை 17 வெள்ளிக் கிழமை பத்ரு யுத்தம் நிகழ்ந்தது. இந்த யுத்ததில் சிறிய படையினராக இருந்த முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்து வெற்றி பெறச் செய்தான்.
"நீங்கள் அல்லஹ்வைக் கொண்டும்,(சத்தியத்திற்கும், அசத்தியத்திற்குமிடையே) தீர்ப்பளித்த (பத்ரு போரின்) நாளில்_ இரு படையினர் சந்தித்துக் கொண்ட நாளில்_ நம் அடியாரின் மீது நாம் இறக்கி வைத்த (உதவி முதலிய)வற்றைக்கொண்டும் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக இருந்தால்(இதனை அறிந்து கொள்ளுங்கள்); அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன். (8;41)
ஜகாத்துல் ஃபித்ரு:
ஜகாத்துல் ஃபித்ரு (ஸதகத்துல் ஃபித்ரு) கடமையாக்கப் பட்டதும், பெருநாள் தொழுகை நடைமுறைப்படுத்தப்பட்டதும் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமழானிலிருந்து தான்.
மக்கா வெற்றி:
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, ரமழான் பிறை 21 (10_ ஜனவரி_630கி.பி)இல் நிகழ்ந்தது.
இறை இல்லம் கஃபதுல்லாஹ்வில், சிலை வணக்கமும் இணை வைப்பும் ஒழிக்கப்பட்டு கஃபா பரிசுத்தமாக்கப்பட்ட நாள். அரேபிய தீபகற்பத்தில் சிலை வணக்கம், வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்ட நாள். அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை உயர்வடையச் செய்த நாள். அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், கூட்டத்தினர்களுக்கும் வெற்றியை கொடுத்து கண்ணியப்படுத்திய நாள். இஸ்லாமிய அழைப்புப் பணி உலகம் முழுவதும் பரவ காரணமாக விளங்கிய நாள்.
ஹம்ஜா இப்னு அப்துல்முத்தலிப்(ரழி) படைப்பிரிவு:
நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா சென்ற ஏழாவது மாதம், ரமழானில் (கி.பி 622,ஏப்ரலில்) ஹம்ஜா(ரழி) அவர்களின் தலைமையில் 30 முஹாஜிர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அமைத்து,முதன் முதலாக வெண்மை நிறக்கொடியையும் கொடுத்து, ஷாம் நாட்டிலிருந்து மக்கா நோக்கிவரும் அபூஜஹ்லின் 300 பேர் கொண்ட வியாபாரக்குழுவை வழி மறித்து தாக்குதல் நாடத்த "ஸாஹிலுல் பஹ்ர்" என்ற இடத்திற்கு அப்படையை அனுப்பி வைத்தார்கள்.
பனூ ஸுலைம் குலத்தவருடன் போர்:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, பத்ரு யுத்ததிலிருந்து திரும்பிய பின் ஏழு நாட்கள் கழித்து பனு ஸுலைம் குலத்தவருடன் போர் நிகழ்ந்தது. அக்கூட்டத்தினர் தப்பி ஓடிவிட்டனர். எதிரிகளில் யாரும் கைது செய்யப்படவில்லை.
யமன் நாட்டுக்கு படை:
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமழானில்(கி.பி.631)அலி இப்னு அபூதாலிப்(ரழி) அவர்களின் தலமையில் யமன் நாட்டுக்கு ஒரு படைப்பிரிவு சென்றார்கள்.
ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) படைப்பிரிவு:
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரமழானில் (கி.பி.628) ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவு ’உம்மு கிர்ஃபா’ என்னும் பெண்ணைப் பிடிக்கச் சென்றார்கள். இவள் நபி(ஸல்) அவர்களை கொலை செய்ய 30வீரர்களை தயார் செய்துவைத்திருந்தாள். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அத்தீயவளுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட்டது.
ஃபாத்திமா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரமழானில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகள் ஃபாத்திமா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.
அலி(ரழி) அவர்களின் வீரமரணம்:
ஹிஜ்ரி 40ஆம் ஆண்டு ரமழான் 17வது நாள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற வந்த அமீருல் முஃமினீன் அலி(ரழி) அவர்களை, காரிஜிய்யாக்களில் ஒருவனான அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவன் கொலைசெய்ததால் அன்னார் (ஷஹீத்) வீரமரணமடைந்தார்கள். அப்போது அவர்களின் வயது 63 ஆகும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபாவாக நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், ஆறு நாட்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்கள்.
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 58ஆம் ஆண்டு ரமழானில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.
தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய்
(0559764994)
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label மாதம். Show all posts
Showing posts with label மாதம். Show all posts
Monday, August 30, 2010
Wednesday, July 14, 2010
இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்
இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்
ஷஅபான்
ஷஅபான் மாதத்தின் சிறப்பு
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ரமழானிற்கு)பிறகு ஷஅபான் மாதத்தை விட, வேறு எந்த மாதத்திலும் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு வைப்பவர்களாக இருக்கவில்லை. ஏனெனில் ஷஅபான் முழுவதுமே நோன்பு வைப்பார்கள். மற்றொரு அறிவிப்பில் ஷஅபானில் சில நாட்களைத் தவிர, அதிகமான நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (புகாரி,முஸ்லிம்)
ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவு அல்லாஹுத் தஆலா தன் படைப்பினங்கள் அனைத்தின் பக்கமும் கவனம் செலுத்துகின்றான். படைப்புகள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஆனால் இருவர் மன்னிக்கப்படுவதில்லை. 1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர். 2.எவருடனாவது விரோதம் கொண்டவர் என நபி(ஸல்) அவர்கள் அருளியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)
இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்
கிப்லா மாற்றம்:
நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்றதிலிருந்து பைத்துல் முகத்திஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள். ஹிஜ்ரத் செய்த பதினேழாவது மாதத்தில் (ஷஅபனில்) பைத்துல் முகத்தஸிலிருந்து, மஸ்ஜிதுல் ஹராம்(கஃபதுல்லாஹ்வின்) திசையை கிப்லாவாக மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆயத்தை அருளினான்.
(நபியே), உம்முடைய முகம் (கிப்லா மாற்றக் கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காணுகிறோம். ஆகவே, நீர் விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை நிச்சயமாக நாம்திருப்பி விடுகிறோம்; எனவே, உம்முகத்தை (தொழும்போது மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்புவீராக! (முஃமின்களே) நீங்களும் எங்கிருந்தாலும் (தொழும்போது மஸ்ஜிதுல் ஹராமாகிய) அதன் பக்கம் உங்களுடைய முகங்களை திருப்பிக் கொள்ளுங்கள். (குர்ஆன் 2;144)
ரமழான் மாதத்தில் நோன்பு கடமை:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ஷஅபான் மாதத்தில் தான் ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமையாக்கப்பட்டது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர் ஆகலாம். (குர்ஆன் 2;183)
பனூ முஸ்தலக் யுத்தம்:
இதை "அல் முரஸீஃ யுத்தம்" என்றும் கூறப்படுகிறது. இந்த யுத்தம் ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஷஅபான் மாதம் நிகழ்ந்ததென்றும், சிலர் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு ஷஅபான் மாதம் நிகழ்ந்ததென்றும் கூறுகின்றனர். இப்போரில் எதிரிகள் அணியில் 10 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் அணியில் யாரும் கொல்லப்படவில்லை. ஆனால் ஒரு அன்சாரி சஹாபி, ஹிஷாம் இப்னு ஹுபாபா என்ற ஒரு முஸ்லிம் வீரரை எதிரிப்படையில் உள்ளவர் என்று எண்ணித் தவறாகக் கொலை செய்துவிட்டார்.
இப்போரிலிருந்து திரும்பும்போது தான் அன்னை ஆயிஷா(ரழி) அவ்ர்கள் மீது, நயவஞ்சகர்கள் அவதூறு சம்பவத்தை பரப்பினர். இதனால் கவளையடைந்திருந்த அன்னையார் அவர்களுக்கு, அவர்களின் பத்தினித்தனத்தை பறைசாற்றி அல்லாஹுத்தஆலா குர்ஆனில் அத்தியாயம் 24 இல், 11 முதல் 20 வரை உள்ள வசனங்களை இறக்கி வைத்தான்.
உமர் இப்னு கத்தாப்(ரழி) படைப்பிரிவு:
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாதத்தில் உமர்(ரழி) அவர்களின் தலைமையில் 30 நபர்களை 'துர்பா' என்னும் பகுதிக்கு நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இவர்களின் வருகையை அறிந்த துர்பாவில் வசிக்கும் ஹவாஸின் கூட்டத்தினர்கள் அப்பகுதியை காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர்.
பஷீர் இப்னு சஅது(ரழி) படைப்பிரிவு:
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாதத்தில் பஷீர் இப்னு சஅது(ரழி) அவர்களின் தலைமையில் 30 நபர்களை அனுப்பி 'ஃபதக்' என்னும் பகுதியில் வசிக்கும் பனூ முர்ரா கிளையினர்மீது தக்குதல் நடத்த ஒரு படையினரையும் அனுப்பிவைத்தார்கள்.
அபூகதாதா(ரழி) படைப்பிரிவு:
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஷஅபான் மாதத்தில் அபூகதாதா(ரழி) அவர்களின் தலைமையில் 15 பேருடன், நஜ்து மாகாணத்தில் உள்ள 'முஹாரிப்' என்னும் பகுதிக்கு ஒரு படையை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
தொகுப்பு: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய்

Friday, June 12, 2009
இஸ்லாம் மாதத்தின் சிறப்பம்சம்
இஸ்லாம் மாதத்தின் சிறப்பம்சம்
இஸ்லாமிய ஆண்டிலும் மற்ற எல்லா ஆண்டுகளைப் போல 12 மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சந்திரனின் ஓட்டத்தை அடிப்படையாக வைத்து அமைந்த இஸ்லாமிய மாதங்கள் ஒவ்வொற்றிலும் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. அவற்றை பார்க்கலாம்.
முகரம் : இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும். போர் செய்யத் தடை செய்யப்பட்ட மாதமாக இருந்ததால், போர் விலக்க மாதம் என்ற பொருளில் இடம் பெறுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாம் கூறும் பல முக்கிய நிகழ்வுகளும், அற்புதங்களும் நடந்துள்ளன.
ஸஃபர் : பயணம் என்ற பொருளிலும், இலைகள் பழுத்து விழும் இலையுதிர் காலத்தில் வருவதால் பழுப்பு நிறம் என்ற பொருளிலும் இம்மாதம் அழைக்கப்படுகின்றது. பீடை மாதம் என ஒதுக்கும் ஒரு சிலருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தில் இதுபோன்ற எண்ணத்திற்கே இடமில்லை என வலியுறுத்தினார்கள். வெற்றியின் மாதம் என்றும், நன்மை நல்கும் மாதம் என்றும் நவின்றார்கள்.
ரபீஉல் அவ்வல் : வசந்தம் எனும் பொருள் கொண்ட ரஃபீ எனும் அரபி மூலச் சொல்லில் இருந்து வருகின்றது. இம்மாதத்தில் வசந்த காலம் துவங்குவதால் முதல் வசந்தம் அல்லது வசந்தத்தின் துவக்கம் என்று பொருள்படுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும், மரணித்ததும் இம்மாதத்தின் 12ஆம் நாளில்தான் என்பதால் இம்மாதம் மிகவும் சிறப்புக்குரிய மாதமாகும்.
ரபீஉல் ஆகிர் : வசந்தத்தின் இறுதி எனப் பொருளில் வரும் இந்த மாதத்தில் தான் ஆன்மிகப் பேரொளி முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் மரணித்தார்கள்.
ஜமாதில் அவ்வல் : இம்மாதத்தில் பனி உறையத் துவங்குவதால் இம்மாதம் பனி உறையும் மாதத் துவக்கம் என்னும் பொருள்பட அழைக்கப்படுகின்றது. இம்மாதத்தில் இறைத் தூதர் ஸாலிஹ் (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
ஜமாதில் ஆகிர் : பனி உறையும் இறுதி மாதம் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூபக்கர் பிறந்தார்கள்.
ரஜப் தர்ஜீப் : என்ற சொல்லில் இருந்து வந்தது ரஜப் சொல்லாகும். கண்ணியமிக்க அல்லது மதிப்புமிக்க என்று பொருள்படும் இம்மாதத்தின் 27ஆம் தேதி இரவில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனைச் சந்திக்க விண்ணேற்றம் செய்தார்கள்.
ஷஃபான் : பங்கிடுதல் என்ற பொருளில் இம்மாதத்தில் இறைவன் தன் அடியார்க்கு உணவைப் பங்கீடு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஷபேபராஅத் என்னும் பாவ விடுதலை இரவு இம்மாதத்தில் தான் வருகிறது. ரமலான் இறைவனுடைய மாதம், ஷஅபான் என்னுடைய மாதம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியிருக்கின்றார்கள்.
ரமலான் : ரமீது என்ற வேர்ச்சொல்லில் இருந்து ரமலான் பிறந்தது. இதன் பொருள் எரிப்பது என்பதாகும். ஆரம்பக் காலத்தில் சூரியக் கணக்குப்படி இம்மாதம் கோடை காலத்தில் வந்ததால் எரிக்கும் கோடை வெப்பத்திற்காகவும், இம்மாதம் நோன்பு நோற்பதால் அடியார்களின் பாவங்கள் எரிக்கப்படுவதாலும் இப்பெயர் பெற்றது. இம்மாதம் வேதங்கள் இறக்கப்பட்ட மாதமாகும்.
ஷவ்வால் : ஷவ்ஸ் என்ற அரபிச் சொல்லில் இருந்து ஷவ்வால் வந்தது. சிதறி விடுதல் என்ற பொருள்படும் இம்மாதத்தில் தான் சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டன. இம்மாதத்தின் முதல் நாளில் தான் முப்பது நாட்கள் நோன்பேற்ற மக்கள் ஈதுல் ஃபித்ர் பெருநாள் கொண்டாடுகின்றனர்.
துல்கஃதா : இறைவனால் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இருத்தல் என்ற பொருளில் வரும் இம்மாதத்தில் அக்கால அரபிகள் போரைத் தவிர்த்து வீட்டில் இருந்தார்கள். இறைவன் ஆணைப்படி நபி இப்றாஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் கஃபாவை நிர்மாணிக்கத் துவங்கி, முடித்த மாதமாகும்.
துல்ஹஜ் : இஸ்லாமிய ஆண்டின் நிறைவு மாதம் இது. இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் மாதம் இது. இம்மாதத்தின் முதல் பத்து இரவுகள் மிகப் புனிதமானவை.
--
A.Ahamed Ismathullah Sait
Camp@Gulbarga-585 104
CELL : 0091 94804 83943

Saturday, January 10, 2009
திருமறை வந்த தேன்மாதம்
திருமறை வந்த தேன்மாதம் வருகிறது
ரமலான் வருகிறது !
நலமள்ளி வருகிறது !
கமழும் புகழ் நோன்பைக்
கைகோர்த்து வருகிறது !
ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மானம் செய்ய
திருநோன்பு வருகிறது
அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வருகிறது !
திருமறை வந்த
தேன்மாதம் வருகிறது !
தக்வாவை கொஞ்சம்
தட்டிடவே வருகிறது !
ஹக்கனவன் கனிவையும்
அறிவிக்க வருகிறது !
அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த நல் அமலை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வருகிறது !
பத்திய மாதமென்று
பறைசாற்றி வருகிறது !
உத்தம ஸஹாபாக்கள்
உவந்த மாதம் வருகிறது !
பசியின் ருசியறிய
பாங்கோடு வருகிறது ! கல்பில்
கசியும் ஈரத்தைக்
காட்டிடவும் வருகிறது !
கஸ்தூரி வாசம்
கமகமக்க வருகிறது !
கைகளை ஈகையால்
அலங்கரிக்க வருகிறது !
ஏழை வீதிகளும்
புன்னகைக்க வருகிறது
எல்லோர் மனங்களுக்கும்
சுகம் சேர்க்க வருகிறது !
கலிமாவில் நாவெல்லாம்
கலந்திட வருகிறது !
தொழுகை தவறாதேயென
தூது சொல்லி வருகிறது !
லைலத்துல் கத்ரென்னும்
ரம்மிய இரவுதனை
தொழுகையால் அலங்கரிக்க
சோபனமாய் வருகிறது !
அன்று பத்ருப் போரில்
அண்ணலார்க்கு வெற்றியினை
தந்து பரிசளித்த
தனிமாதம் வருகிறது !
நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாதம் வருகிறது !
மாண்பில் நாம் மகிழ இபாதத்
மணமள்ளி வருகிறது !
ரமலான் வருகிறது
நலம் கொண்டு வருகிறது !
கமழும் புகழ் நோன்பைக்
கைகோர்த்து வருகிறது !
-
பொற்கிழி கவிஞர் மு.சண்முகம்,
இளையான்குடி
நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை
04564 245988
99763 72229
ரமலான் வருகிறது !
நலமள்ளி வருகிறது !
கமழும் புகழ் நோன்பைக்
கைகோர்த்து வருகிறது !
ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மானம் செய்ய
திருநோன்பு வருகிறது
அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வருகிறது !
திருமறை வந்த
தேன்மாதம் வருகிறது !
தக்வாவை கொஞ்சம்
தட்டிடவே வருகிறது !
ஹக்கனவன் கனிவையும்
அறிவிக்க வருகிறது !
அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த நல் அமலை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வருகிறது !
பத்திய மாதமென்று
பறைசாற்றி வருகிறது !
உத்தம ஸஹாபாக்கள்
உவந்த மாதம் வருகிறது !
பசியின் ருசியறிய
பாங்கோடு வருகிறது ! கல்பில்
கசியும் ஈரத்தைக்
காட்டிடவும் வருகிறது !
கஸ்தூரி வாசம்
கமகமக்க வருகிறது !
கைகளை ஈகையால்
அலங்கரிக்க வருகிறது !
ஏழை வீதிகளும்
புன்னகைக்க வருகிறது
எல்லோர் மனங்களுக்கும்
சுகம் சேர்க்க வருகிறது !
கலிமாவில் நாவெல்லாம்
கலந்திட வருகிறது !
தொழுகை தவறாதேயென
தூது சொல்லி வருகிறது !
லைலத்துல் கத்ரென்னும்
ரம்மிய இரவுதனை
தொழுகையால் அலங்கரிக்க
சோபனமாய் வருகிறது !
அன்று பத்ருப் போரில்
அண்ணலார்க்கு வெற்றியினை
தந்து பரிசளித்த
தனிமாதம் வருகிறது !
நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாதம் வருகிறது !
மாண்பில் நாம் மகிழ இபாதத்
மணமள்ளி வருகிறது !
ரமலான் வருகிறது
நலம் கொண்டு வருகிறது !
கமழும் புகழ் நோன்பைக்
கைகோர்த்து வருகிறது !
-
பொற்கிழி கவிஞர் மு.சண்முகம்,
இளையான்குடி
நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை
04564 245988
99763 72229
Subscribe to:
Posts (Atom)