Wednesday, June 18, 2008

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-ந்தேதி நடக்கிறது

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-ந்தேதி நடக்கிறது
கருணாநிதி பங்கேற்கிறார்

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மணிவிழா மாநாடு 21-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் எம்.பி., சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

60 பேருக்கு விருது

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சி 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுவது, சிறுபான்மை சமுதாய கலாசார தனித்தன்மையை பாதுகாப்பது போன்ற அடிப்படை கொள்கைகளை கொண்டுள்ளது. கட்சியின் மணிவிழா (60-வது ஆண்டு) மாநில மாநாடு சென்னையில் 21-ந்தேதி பலகட்டங்களாக நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமையில் விருதுவழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் மணிவிழா மாநாட்டு மலரை மில்லத் ஜி.எம்.பனாத்வாலா வெளியிடுகிறார். அதனை மத்திய மந்திரி ஆ.ராசா பெற்றுக்கொள்கிறார். முஸ்லிம் சமுதாயத்தில் முன்னுதாரணமாக விளங்கிய 60 பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதினை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபட்டு வரும் இந்திய கம்ïனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை ஆகியோருக்கு அமைச்சர் அன்பழகன் சமுதாய நல்லிணக்க விருது வழங்குகிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருபவர்களுக்கு காயிதே மில்லத் விருதினை மத்திய மந்திரி இ.அஹமது வழங்குகிறார்.

ஜெயந்திநடராஜன்-கனிமொழி

அதே போல மகளிரணி சார்பில் சென்னை ராஜாஜி ஹாலில் காலை 10 மணிக்கு கல்வி மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்கு கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசபர் தலைமை தாங்குகிறார். இதில் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்தியமந்திரியுமான ஜெயந்தி நடராஜன் எம்.பி., வக்கீல் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 6 பெண்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்படுகிறது.

பின்னர் மாலையில் சென்னைத் தீவுத்திடலில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு நிறைவு விழா நடைபெறுகிறது. அதனையொட்டி மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து ஊர்வலம் புறப்படும். அதில் முதல் முறையாக 12 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சட்டை பேண்டு அணிந்து பச்சை தொப்பியுடன் சீருடைப் பேரணியாக தீவுத்திடலுக்கு வருவார்கள்.

கருணாநிதி நிறைவுரை

அங்கு நடைபெறும் நிறைவு விழாவுக்கு மாநில தலைவர் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமை தாங்குகிறார். அனைவரையும் டாக்டர் எஸ்.ஏ.சையர்சத்தார் வரவேற்கிறார். முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜி.எம்.பனாத்வாலா, மத்திய மந்திரி இ.அஹமது, மத்திய மந்திரி ஜி.கே.வாசன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்திய கம்ïனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி. கூறினார்.

No comments: