Saturday, June 21, 2008

முஸ்லிம் லீக் மாநாட்டில் சமய நல்லிணக்க விருது



எம்.டி.ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை, பொன்னம்பல அடிகளார், நல்லகண்ணுவுக்கு விருது!



சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டையொட்டி இன்று காலை 10.00 மணிக்கு சமய நல்லிணக்க விருது வழங்கும் விழா நடைபெற்றது.

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோருக்கு சமய நல்லிணக்க விருதினை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழங்கினார். அவர்களுக்கு முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பொன்னாடை போர்த்தினார்.

இன்று காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் விழா தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் ஜி.எம். பனாத்வாலா ஸாஹிப், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, டி.பி. மைதீன்கான், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், மத்திய அமைச்சர் இ.அஹமது, ஆர்.எம்.வீரப்பன், கேரளாவிலிருந்து அஜீத் சாஹிப், கவிக்கோ அப்துல் ரஹ்மான், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்குமாறு தலைமை நிலையச் செயலாளர் அபூபக்கர் முன்மொழிந்தார். அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீது வழிமொழிந்தார். செய்யது ஹபீப் அப்துல் ரஹ்மான், ஜமாஅத்துல் உலமா பேரவை மாநிலத் தலைவர் உமர் பாரூக் தாவூதி ஆகியோர் துஆ ஓதினர்.

ஸலாஹுதீன், இசை மாமணி எம்.எம்.யூசுப், மாநில உலமாக்கள் அணி தலைவர் ஹாமித் பக்ரீ, மார்க்க அணி அமைப்பாளர் கனிசிஷ்தி, இலக்கிய அணி அமைப்பாளர் தஜம்முல் முஹம்மது, அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது, அஜீஸ் சாஹிப், அமெரிக்கா காயிதெமில்லத் பேரவை தலைவர் நூர்தீன், துபாய் ஸலாஹுத்தீன், மெஜஸ்டிக் கரீம் ஆகியோர் உரையாற்றினார்.

சையத் ஸலாஹுத்தீனின் சேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித் பாராட்டு வாசித் தார்.

கம்யூனிஸ்டுகளின் மூத்த தலைவர் ஆ. நல்லகண்ணு பற்றிய பாராட்டுக் குறிப்பினை மாநில அமைப்பாளர் கமுதி பஷீர் வாசித்தார்.

வின்சென்ட் சின்னத்துரை பற்றி அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பாராட்டுக் குறிப்புரை வழங்கினார்.

பின்னர் இம்மூவருக்கும் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

http://www.muslimleaguetn.com/

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநில மாநாட்டுத் தலைமையுரையும், மாநாட்டுப் பிரகடனமும்!

http://www.muslimleaguetn.com/news.asp

வந்தோரை வாழ வைப்பவர் செய்யிது ஸலாஹுத்தீன் ஆற்காடு வீராசாமி பேச்சு

http://www.muslimleaguetn.com/news.asp?id=28

பெண்கள் தமக்குத் தாமாகவே தடை விதித்துக் கொள்கிறார்கள்! -ஃபாத்திமா முஸஃப்பர் பேச்சு

http://www.muslimleaguetn.com/news.asp?id=27

மாநாட்டு நிகழ்ச்சிகள், பிறைக்கொடி பேரணி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

http://www.muslimleaguetn.com/news.asp?id=26




No comments: