Sunday, July 20, 2008

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!


இந்தூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கு மத்திய பிரதேச மாநில முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது அலி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு-

ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்ற பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ~பாரத் பந்த்~தின் போது இந்தூரில் மேற்கத்திய ஆதிக்க சக்திகள் ஒரு கலவரத்தை நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் 7 பேர் முஸ்லிம்கள்@ ஒருவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

இந்த வகுப்பு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று வௌ;வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே நாளில் இந்தூரை சேர்ந்த சில இந்துத்துவ சக்திகள் உதயபுரா, ஹமானியா கல்விக் கூடத்தின் மீது கல் வீசி தாக்கியுள்ளார்கள். முகரிபுரா என்ற இடத்தில் ஒரு இண்டர்நெட் மையத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கணிணிகளை சேதப்படுத்தினர். அங்கு நடந்த வன்முறையில் சிந்தி இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த வன்முறைக் கும்பல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கஜரானா, ஜுனாரிஷாலா, முகரிபுரா, பாம்பே பஜார், ஜின்ஸி, ராணிபுரா, மல்ஹர்கன்ஜ், மல்ஹர்பல்தான் மற்றும் சம்பபாக் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் தாக்கி வீடுகளை சேதப்படுத்தினர்.

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

கீழ்க்கண்ட வகைகளில், இழப்பீடு வழங்க வேண்டும்:

மரணமடைந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மத்திய அரசுப் பணி...

படுகாயமுற்று அவதிப்படும் நபர்களுக்கு மாநகராட்சி மார்க்கெட்டில் ஒரு கடை ஒதுக்க வேண்டும்...

கலவரத்தில் கணவனை இழந்து விதவையானவர்களுக்கு ஓய்வ+தியம் வழங்க வேண்டும்@ அவர்களது குடும்ப குழந்தைகளுக்கு கல்வியில் சலுகை அளிக்க வேண்டும்...

கலவரம் குறித்து முழுமையான சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்...

சி.பி.ஐ. விசாரணைக்கு முன்பு எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது...

-இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://www.muslimleaguetn.com/news.asp

No comments: