Thursday, August 28, 2008

வெளிநாட்டு வேலை மோகம்

வெளிநாடு சென்றால் ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம், கைநிறைய சம்பளம் கிடைக்கும், தனது குடும்பத்தாரை எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச் சியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏஜென்ட்களின் பேச்சை நம்பி ஒரு லட்சம், 2 லட்சம் என கொடுத்து வெளிநாடு செல்ல துடிக்கின்றனர்.



பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.





அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.





இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம்.. வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.





போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்த புதிய பகுதி துவக் கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை மோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய துயர அனுபவங்களை "தினமலர்' இதழுக்கு எழுதி அனுப்பலாம். புகைப்படங்களையும் அனுப்பலாம். இதன் மூலம் மற்றவர்களும் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து வெளிநாட்டு வேலை என்ற மோகத் தில் இருந்து விடுபட உதவலாம்.





உங்கள் வசதிக்காக சில கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளன.





கேள்விகள்







1. பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் இருந்ததா? அதற்கு எவ்வளவு செலவானது?

2. குறிப்பட்ட நாட்டில் குறிப் பிட்ட வேலையைப் பெற இடைத் தரகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?

3. எந்த நாட்டில் எந்த மாதிரியான வேலை? என்ன சம்பளம் என்றெல்லாம் முன் கூட்டியே தெரிவித்தார்களா?

4. விசா வாங்க எவ்வளவு செலவு செய்தீர்கள்?

5. அந்த நாட்டிற்குச் சென்றதும், உங்கள் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களா?

6. அங்கு ஏற்கனவே கூறிய வேலை தரப்பட்டதா? பேசிய சம்பளம் தரப்பட்டதா?

7. ஏற்கனவே குறிப்பிட்ட வேலை அல்லது சம்பளம் தரப்படாத நேரத்தில், அங்கிருந்து உடனே இந்தியா திரும்ப அனுமதித் தார்களா?

8. எதிர்பார்த்துச் சென்ற வேலை அல்லது சம்பளம் கிடைக்காத நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டம் எப்படி இருந்தது?

9. நீங்கள் எதிர்பார்க்காத வேலை செய்யவோ, கூடுதல் நேரம் பணி புரியுமாறோ வற்புறுத்தப்பட்டீர் களா? துன்புறுத்தினார்களா?

10. அங்கு தங்குவதற்கும் நித்திய கடன்களைக் கழிப்பதற்கும் உரிய வசதி செய்து தரப்பட்டிருந்ததா?

11. நீங்கள் அங்கு பட்ட கஷ்டங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா? அவர்களுடைய மன நிலை எப்படி இருந்தது?

12. அந்த நாட்டில் வேலை செய்து நாடு திரும்பும்போது, எந்த குறிக் கோளோடு சென்றீர்களோ அந்த அளவுக்கு பணம் சேர்க்க முடிந்ததா?

13. இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

14. இந்தியாவில் சுய தொழில் துவங்க அரசு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்?

15. வெளிநாட்டில் வேலை தேடிச் செல்ல நினைப்பவர்களுக்கு, உங்கள் அனுபவ அடிப்படையில் கூற விரும்பும் அறிவுரை என்ன?



அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதி அனுப்புவதன் மூலம் முழுத் தகவல்களையும் தர இயலும்.நீங்கள் அனுப்பும் தகவல்களை வெளிநாட்டு மோகம் என்ற கவரின் மேல் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.





வெளிநாட்டு வேலை மோகம்,
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை- 625 016.





கேள்விகளுக்கான பதிலை coordinator@dinamalar.com என்ற முகவரிக்கு இ மெயில் அனுப்பலாம்.

No comments: