Sunday, September 21, 2008

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.

இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.

இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: