பனைக்குளத்தில் ரம்ஜானை முன்னிட்டு குரான் ஓதும் போட்டி
10 நாட்கள் நடைபெறுகிறது
http://www.dailythanthi.com/article.asp?NewsID=436938&disdate=9/7/2008&advt=2
பனைக்குளம்,செப்.7-
ரம்ஜானை முன்னிட்டு பனைக்குளத்தில் திருக் குரான் ஓதும் போட்டி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
குரான் ஓதும் போட்டி
மண்டபம் ïனியன் பனைக் குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குரான் ஓதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி நேற்று நத்தர் ஒலியுல்லாஹ் தர்கா வளாகத்தில் தொடங் கியது.
விழாவுக்கு பனைக்குளம் ஜ×ம்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். முஸ் லிம் பரிபாலன சபை செயலா ளர் வக்கீல் அர்சத் உசேன், நிர்வாக சபை செயலாளர் அகமது கமால், ஊராட்சி தலைவர் சலாமுல் அன்சார், ஐக்கிய முஸ்லிம் சங்க செய லாளர் காதர் மைதீன், வாலிப முஸ்லிம் சங்க செய லாளர் ரசீது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
270 பேர்
விழாவில் பெருங்குளம் தலைமை இமாம் சாகுல் ஹமீது ஆலிம், ரியாஸ்கான், ஆற்றாங்கரை தஸ்தகீர், ஐக் கிய ஜமாத் நிர்வாகிகள், வாழுர், சித்தார்கோட்டை, அத்திïத்து, புதுவலசை, அழகன்குளம், ஆற்றாங்கரை, பெருங்குளம் பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருக்குரான் ஓதும் போட்டியில் 270க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரி சுகள் மற்றும் ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்படும். ஏற் பாடுகளை திருக்குரான் ஓதும் போட்டி செயலாளர் பாடகர் சகுபர் சாகுல் ஹமீது தலை மையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment