சேலம் செயற்குழுவில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்!
http://www.muslimleaguetn.com/news.asp?id=201
புனித ரமளான் மாத நோன்பு காலம் முழுவதும் முஸ்லிம் லீக் பிரைமரி அமைப்புக்கள் சிறப்பான பணியாற்றுவதன் மூலம் சமூக நல்லிணக்கதையும். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நல்வாழ்வுக்கும் துணைபுரிய வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் மாநிலத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட முடிவுகள்:
ரமளான் செயல்திட்டங்கள்:
புனித ரமளான் நோன்பு காலம் தற்போது துவங்க உள்ளது. இறைவனின் அருள் நிறைந்த இம்மாதத்தில் முஸ்லிம் லீகினர் அனைவரும் சமூக நலப் பணிகளில் திட்டமிட்டு ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஏழை எளியவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு தேவையான உணவு. உடை. உறைவிட வசதிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தர்மகாரியங்களை தாராளமாகச் செய்யும் இம்மாதத்தில். தரவேண்டியவர்களிடமிருந்து ஏழை வரியை பெற்று பெறவேண்டியவர்களுக்கு வழங்கும் பணியை முஸ்லிம் லீக் அமைப்புக்கள் செய்ய வேண்டும். இதற்காக பைத்துல்மால் அமைப்புக்களை தோற்றுவித்து முறையாக இந்த பணிகளைச் செய்யலாம்.
முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரை கண்டறிந்து அவர்களுக்குரிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சர்வசமயத்தவர்களையும் பங்கேற்கச் செய்து சமூக நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு:
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான 3.50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் முறையாக கிடைக்க அரசு உத்தரவுகள் பிறப்பித்தும் சில துறைகளில் இதுபின் பற்றப்படவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கிறது.
பெரியார் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளர், இளநிலை உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்களில் ஒரு சதவீத முஸ்லிம்கள் கூட நியமிக்கப்படவில்லை.
இப்பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்ட விளம்பரப்படி 6 பேராசிரியர்கள், 6 இணை பேராசிரியர்கள் மற்றும் 24 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இந்த இட ஓதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும், இதே நிலை அரசின் கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் வேளாண் பல்கலைக் கழகங்களிலும் உள்ளதால் அனைத்து துறைகளிலும் 3.50 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள இச்செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மண்டல மாநாடு:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மண்டலத்தில் முஸ்லிம் லீக் மாநாட்டை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் ரமளான் நோன்பு முடிந்த ஓரிரு நாட்களில் நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்த 6 மாவட்டங்களின் நிர்வாகிகளால் நடத்தப்பட்டு அக்கூட்டத்தில் மாநாட்டு தேதியையும் இடத்தையும் முடிவு செய்வது.
-மேற்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
No comments:
Post a Comment