முதுகுளத்தூரில் முப்பெரும் விழா
அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறுகிறது
இராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அரசுத் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு - ‘பச்சை ரத்தம்' நூல் வெளியீடு - மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை இணைந்து முப்பெரும் விழா முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எதிர்வரும் அக்டோபர் 25 சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு நடைபெற இருக்கிறது என ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் ஜமாஅத் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூத், முஸ்தபாபுரம் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி கல்விக்குழுத் தலைவர் திவான் முஹம்மது, தாளாளர் கமால் நாசர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜெய்லானி, ஜமாஅத் பிரமுகர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் ஜில்லா தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி, தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர்,முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.நெய்னா முஹம்மது, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மவ்லவி அல்ஹாஜ் எஸ். பஷீர் சேட் ஆலிம், டாக்டர் முஹம்மது மைதீன், டாக்டர் குலாம், முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் ஆலிம், அயிரை அப்துல் காதர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியர் எஸ். ஆபிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
இவ்விழாவில் பேராசிரியர் ஆபிதீன் மற்றும் பேராசிரியர் இப்ராஹிம் ஆகியோர் எழுதிய ‘பச்சை ரத்தம்' எனும் நூல் வெளியிடப்பட உள்ளது. இந்நூல் சுதந்திரப் போரில் பங்கேற்று மறைக்கப்பட்ட சமுதாயத் தியாகிகள் பற்றியது.
நூலைப் பெற விரும்புவோர் ரூ. 32/ ஐ பேரா. ஆபிதீன், விலங்கியல் துறை, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி, இளையான்குடி 630 702 சிவகெங்கை மாவட்டம் எனும் முகவரிக்கு அனுப்பி பெறலாம்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன், ஏ. அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், ராஜா முஹம்மது, முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
விழா குறித்து மேலதிக விபரம் பெற : முதுவை ஹிதாயத் 94 880 23199
தகவல் முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி
No comments:
Post a Comment