சென்னையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா
சென்னையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா 19.10.2008 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை-4,146 டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னையில் செயல்பட்டு வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் தலைமை வகிக்கிறார். முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
கல்லூரி செயலாளர் ஹாஜி எம்.ஜே.எம். அப்துல் கஃபூர், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக்குமார், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி. மன்னர் ஜவஹர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி முன்னாள் மாணவர் சங்க விருதுகளை தங்க கலியபெருமாள் ஐ.ஏ.எஸ், ஹெச்.தன்ராஜ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. அஹ்மதுல்லாஹ்,கல்லூரிக் கல்வித்துறை இணை இயக்குநர் டாக்டர் முஹம்மது இஃப்திஹாருதீன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.கே. ஹிதாயத்துல்லாஹ் ஆகியோருக்கு வழங்க உள்ளனர்.
சமுதாய சேவைக்கான விருதுகளை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம். பொன்னவைக்கோ, என்.சிவா எம்.பி, ஓமியட் சங்க தலைவர் யு. முஹம்மது கலீலுலாஹ், டாம்கோ தலைவர் ஏ. ஷேவியர் அருள்ராஜ், சிப்காட் தலைவர் டாக்டர் என். கோவிந்தன் ஐ.ஏ.எஸ், குஜராத்தில் பணிபுரியும் பி.பன்னீர்வேல் ஐ.ஏ.எஸ், ஏ. இளங்கோவன் ஐ.ஏ.எஸ், கேப்டன் என்.ஏ. அமீர் அலி, எஸ்.ஆர்.எம்.பல்கலை பி. ரவி, ஜமால் முஹம்மது கல்லூரி தலைவர் எம்.ஜே. நூர்தீன் சாஹிப், சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகள் தலைவர் எஸ்.தஸ்தகீர், ஜமால் முஹம்மது கல்லூரி உதவிச் செயலாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன், நாமக்கல் பாவை நிறுவன தலைவர் சி.ஏ.என். நடராஜன் உள்ளிட்டோர் பெற உள்ளனர்.
பேராசிரியர் முனைவர் எம்.எம். சாகுல் ஹமீது ஆண்டறிக்கை வாசிக்கிறார். சென்னை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பி. அப்துல் காதர் நன்றியுரை நிகழ்த்துகிறார். மேலும் அவர் எழுதிய நம்நாடு முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ற சமூக சிந்தனை நூல் வெளியிடப்பட இருக்கிறது.
மேலும் விபரமறிய தொடர்புக்கு : 98 400 400 67 / 98 402 46265 / 98 404 40818
செய்தி : முதுவை ஹிதாயத் ( 94 880 23 199 )
No comments:
Post a Comment