Wednesday, November 26, 2008

ரியாத் தமிழ்ச் சங்கம்

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எழுத்துக்கூடமானது கடந்த இரண்டு வருடங்களாக மாதத்தின்
முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் இலக்கியக்கூட்டம் நடத்தி ரியாத் வாழ் தமிழ்
எழுத்தாளர்களை எழுத்துலகில் மேலும் வளர ஊக்குவித்து வருவது நாம் அனைவருக்கும்
தெரிந்ததே. நமது எழுத்துக்கூட கிரீடத்தில் மற்றோர் இறகாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று
எழுத்துக்கூடத்தின் தமிழ் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. எழுத்துக்கூடத்தின் இரண்டு வருட கனவு
நனவாவதற்கு உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளது.

நூலகத்திற்கு திரு. வெற்றிவேல் அவர்கள் கதாவிலாசம் மற்றும் தமிழ் என்ஸைக்ளோபீடியா பாகம்
1, 2 3 ஆகிய புத்தகங்களையும், திரு. சபாபதி அவர்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள்
பலவற்றையும், முனைவர் மாசிலாமணி அவர்கள் முப்பதிற்கும் மேற்பட்ட பலதரப்பட்ட செம்மையான
தமிழ் புத்தகங்களையும் முதற்கட்டமாக வழங்கியுள்ளனர். புத்தகம் வழங்கிய அனைவருக்கும் ரியாத்
தமிழ்ச் சங்கம் தனது நன்றிகளை காணிக்கையாக்குகிறது. இந்த நூலகத்திற்காக சென்னையில்
இருந்து பல புத்தகங்களை தேடித் தேடி தெரிவுசெய்து நமக்கு வழங்கிய எழுத்துக்கூடத்தின்
மூத்த உறுப்பினர் திருமதி. விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களுக்கும் நமது தனிப்பட்ட
நன்றிகளை ரியாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

புத்தகங்களின் வரிசை மற்றும் அன்பளிப்பு செய்தவர்களின் விபரம் விரைவில் ரியாத் தமிழ்ச்
சங்கத்தின் வலைத்தளத்தில் (http://www.riyadhtamilsangam.com/) வெளியாகும் என்பதனைத்
தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த எழுத்துக்கூடக் கூட்டங்களில் மேலும் பல புத்தகங்கள்
அன்பளிப்பாக வர இருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
கி.வை. ராஜா
செயலாளர், ரியாத் தமிழ்ச் சங்கம்
kvraja@gmail.com

No comments: