http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1951&Country_name=Gulf&cat=new
சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் துபாய் பூகோள கிராமம்
துபாயில் வருடந்தோறும் நடைபெறும் விற்பனைத் திருவிழாவினையொட்டி பூகோள கிராமம் பல்வேறு நாடுகளின் கலை, கலாச்சாரத்தை நினைவு கூறும் வண்ணம் 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தற்காலிக இடத்தில் செயல்பட்ட பூகோள கிராமம் தற்பொழுது துபாய்லேண்ட் பகுதியில் 17.2 மில்லியன் சதுர அடி பரப்பில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்காளாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், லெபனான், சிரியா, கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதில் அரங்குகளை அமைத்துள்ளன.
இந்த அரங்குகளில் அந்தந்த நாடுகளின் கலை நிகழ்ச்சிகள், பொருட்கள் உள்ளிட்டவை அனைவரையும் கவரும் வண்ணம் விளங்கி வருகிறது.
குழந்தைகள் விளையாட்டு அரங்கு, இந்திய உணவுக் கூடம், நீர் சாகச விளையாட்டு, சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் அமைப்பின் அரங்கு உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
கடந்த வருடம் ஐந்து ரூபாயாக இருந்த நுழைவுக் கட்டணம் இவ்வாண்டு பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாலை நான்கு மணி முதல் நள்ளிரவு வரை இப் பூகோள கிராமம் பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்படுகிறது.
எதிர்வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை இப்பூகோள கிராமம் செயல்படும்
No comments:
Post a Comment