பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்டுரைப் போட்டி
சென்னை, டிச. 26: "பயங்கரவாதத்துக்கு எதிரான பதில் நடவடிக்கையில் போலீஸ், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள், மக்கள் பங்களிப்பு' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீஸ் நண்பர்கள் திட்ட இயக்குநரும் ஐ.ஜி. யுமான பிரதீப் வி. பிலிப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர், தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்û
fop@airtelmail.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி தங்களது பங்கேற்பைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் இல்லை.
பங்கேற்பாளர்கள் தங்களது சுய விவரங்களை atccontest@gmail.com
என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள் 1500 முதல் 2 ஆயிரம் வார்த்தைகள் வரையில் இருக்கலாம். இதற்கான விண்ணப்ப மனுக்களை 2009 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment