அமீரக இந்திய பிரெடர்னிடி ஃபாரம் நடத்தும் கட்டுரைப் போட்டி
அமீரக இந்திய பிரெடர்னிடி ஃபாரம் அமீரக வாழ் இந்தியர்களுக்காக 'இந்தியா அடுத்து' ( INDIA NEXT ) எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியொன்றினை அறிவித்துள்ளது. இக்கட்டுரைப் போட்டியில் அமீரக வாழ் இந்தியர் அனைவரும் பங்கேற்கலாம்.
கட்டுரையினை ஆங்கிலம், உர்தூ, ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எழுதலாம்.
இப்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. பதினெட்டு வயதுக்குட்பட்ட பள்ளி மாணாக்கர்கள் ஒரு பிரிவாகவும், பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றொரு பிரிவாகவும் கணக்கில் கொள்ளப்படுவர்.
'இந்தியா அடுத்து' எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட இக்கட்டுரைப்போட்டி இந்திய ஜனநாயகம் நேற்று, இன்று,நாளை,தேசியம், சமூகநீதி, சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையினர், அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி உரிமை, தேசிய பாதுகாப்பு, சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்டவைகளைக் கொண்டு 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இக்கட்டுரைப் போட்டி கோழிக்கோடில் பிப்ரவரி 13 முதல் 15 வரை நடைபெற இருக்கும் பாப்புலர் பிரண்ட்டின் தேசிய அரசியல் மாநாட்டினையொட்டி நடத்தப்படுகிறது.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி
மின்னஞ்சல் : eiffcontest@gmail.com
தொலைநகல் : 06 5345654
EMIRATES INDIA FRATERNITY FORUM
P O BOX NO. 3782
SHARJAH - UAE
மேலதிக விபரம் பெற 050 966 2345
கடைசி தேதி : 31 ஜனவரி 2009
No comments:
Post a Comment