Wednesday, December 31, 2008

அன்பு மானிடா!

அன்பு மானிடா!

www.muduvaivision.com


ஆறு பத்தாண்டுகள் அற்ப வாழ்க்கை
அந்த வாழ்விலே ஆறு பருவம்
அழகிய குழந்தை ஒன்று
ஆசை மழலை இரண்டு
அன்புச் சிறுவர் மூன்று

வன்மிகு வாலிபம் நாலு
பன்மிகு வயோதிகம் ஐந்து
முற்றும் கடந்த முதுமை ஆறு
முதல் நான்கு அறியாமல் கடந்துவிடும்

ஆறாம் பருவமதில் குழந்தை மனது திரும்பிவிடும்
இடையிருக்கும் இருபருவமதில் நீ
இணையற்ற வாழ்வு வாழவா?
அற்பத்திலும் அற்ப உலகில்

அற்புதமான வாழ்வைத்தேடி
அலைதிரயும் அன்பு மானிடா
அமைதியான வாழ்வு அமைதியானப் பொழுது
அமைதியான உறக்கம் - இவை

அத்துனையும் கானல் நீர்தானடா உனக்கு
வாழ்பவனை கண்டதுண்டா நீ
வாழ்ந்தவனை கேட்டதுண்டா
மறை அளித்த இறைவன் சொல்போன்று

மண்ணான இவ்வுலகம் - அளவு கடந்து
எழும்பி பறக்க இயலாத
எளிய கொசுப்பரவையின் சிறு
இறக்கைக்கு சமமா னதுதானடா

இரவில் வீழ்கிறோம் மஞ்சத்தில்
எழுந்து பறக்கிறோம் புலர்பொழுதில்
எழுந்தமர்ந்த நேரமதை எண்ணினால்
இத்துணை நாழி உறங்கியதை அறிகிறோம்

மஞ்சத்தில் சாய்ந்ததை அறிகிறோம்
மறுகணமே உறக்கத்தை ஏற்றோம்
மறுநாளே நினைவுற்று எழுந்தோம்
இடைப்பட்ட நேரத்தில் எங்கேயடா சென்றோம்?

இழந்த நினைவு திரும்பாமல்
இறப்பெஇதோர் எத்தனை பேர்
இறப்புக்கு சமமான சிறுமரனம்தானே
இந்த உறக்கம் உனக்கு

இகம் கடந்த உறக்கம் இதில்
எவ்வகை தேவையும் உனக்கு
இருக்கவே இல்லையே
நித்திரை கடந்து நீ

நெடு நிலம் பார்க்கையில்
தேவைகளில் உனக்கு
இல்லாதது இல்லையே
அற்ப மானிடா அதற்காக உனை

உறங்கியே இருக்க சொல்வேனா?
உறக்கத்தில் ஆசை கொள்
உறக்கத்திலேயே இருவகை உண்டு
உறக்கத்தில் ஆசை கொள்

நன்றல்லா நினைவு தரும்
நல்ல தூக்கமும் நலம் தராது மெய்க்கு
நாளெல்லாம் நலம் தரும்
நல் உறக்கத்தில் ஆசைகொள்

நல்ல உறக்கத்திலும் நல்லது
நன்றானது அறிவிக்கவா உனக்கு
நிரந்தர தூக்கமான மரணம்தானது!
நித்தம் வரும் உறக்கம்

விடியல் கண்டால் விலகிவிடும்
நிரந்தர தூக்கத்தின் விடியல் மறுமை
நன்மனதுடன் உறக்கம் நர்தூக்கம்
நன்மனதுடன் உறக்கம் நல்விடியல்

அன்றாட உறக்கத்தில் நலம் தேடும் நீ
அந்திம கால உறக்கத்தை நலமாக்கு
இன்னுமா விளங்கவில்லை
இந்த உலக வாழ்வே

இறப்பதற்கான தயாரிப்புதானடா
இறந்தவனைப் பார்த்தாயா?
இனிய நறுமண மலரில் துயில்கிறான்
இறந்தவன் பிறவிப் பலனை அடைந்துவிட்டானடா

மதிகெட்ட மானிடா மரணத்தை ஆசைகொள்
மண்ணுலக வாழ்வின் அர்த்தம் புரியும்
வாழ்வையும் மரணம் அதையும்
யாசிக்காதே நேசி.

முதுவை சல்மான், ரியாத்
salmanhind007@yahoo.co.in

No comments: