ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருக்கு விருது
பட்டுக்கோட்டை, டிச. 7: சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் அதிராம்பட்டினம் எஸ். முகமது அஸ்லமுக்கு "தேசிய சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
அண்மையில் தில்லியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார குழுமம் சார்பில் "அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை மற்றும் பணிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சமூக பொருளாதார, முன்னேற்றத்துக்காக உழைத்து, சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தேசிய சாதனையாளர் விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர்.
தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20081208003926&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=12/9/2008&dName=RgN%F4%EEo&Dist=
No comments:
Post a Comment