சட்டம் ஒழுங்கு
சட்டம் கருப்பு சட்டையின் ஊடே
ஒழுங்கு காக்கி சட்டையின் கைகளில்
சகித்து இனைந்து வாழ்ந்தே தீர
வேண்;டிய கட்டாயம் இருவருக்குமே உண்டு
இவ்விரு நிறங்களும் சச்சரவு புரிந்து
செந்நிர குருதிகள் ஆறாய் ஒழித்தோட
பொது ஜனம் கேட்கிறது உங்களிடம்
சந்தேகம் கலந்த சந்தேக குரலில்
காக்கும் பொறுப்பாளிகளே உங்களுக்கு தகுமா?
காக்கி அணிந்த காவலர்களே
உங்கள் உடலை மறைக்கத்தானே காக்கி உடை
இதயங்களுமா அதனுள் மறைந்து விட்டது?
சட்டம் பயின்றவர்களுக்கே இக்கதி எனில்
சட்டத்தின் நியாயங்களை கேட்டு
சாலை ஓரம் நின்று மன்றாடும்
சாமானியர்களுக்கு எக்கெதி?
சட்டக்கல்லூரி மாணவர்கள்
சண்டையிட்டு மண்டை உடைத்தபோது
செவ்வனே வேடிக்கை பார்த்தீர்கள் கைகட்டி அன்று
சாலையெல்லாம் ரத்த வெள்ளம்
என்னே ஒரு பெருமை இன்று!
ஏங்கிய உங்களின் கரங்களால்
மண்டை உடைக்கப்பட்டவர்களில்
மாநில நீதிமன்றத்தின் நீதிபதியும் ஒருவர்
ஒற்றுமை ஒன்று இங்கே உண்டு
ஓடிய ரத்தமெல்லாம் சட்டம் பயின்றவை
பாடம் சொல்கிறது உங்கள் சண்டைகள்
பயன் ஒன்றும் இல்லை உங்களை நம்பி
காக்கியும் கருப்பும் கை உயர்த்தி
காட்சிகளை கண்ணுற்ற மக்களிடத்தில்
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் அன்றி
நீதி மன்றங்களும் காவல் நிலையங்களும்
கோட்டான்கள் வாழும் கூடாரங்கள்தான்
கேட்பாரற்று பாழமைந்த கட்டிடங்கள்தாம்
சிந்திய ரத்தங்களின் அழுக்கு கறைகள்
சீரிய வழியில் துடைக்கப்படாவிடின்
சட்டமும் ஒழுங்கும் சவக்கிடங்கில்தான்.
முதுவை சல்மான்
ரியாத்
No comments:
Post a Comment