கவிதை
கலைமறை முஹம்மதென்னும்
காரணமே – காணுலகு!
( அமுதகவி அரசு அபிவைத்தாஜ் )
கலைமறை முஹம்மதென்னும்
காரணம் இல்லையாகில்
உலகுவிண் இரவி திங்கள்
ஒளிர் வுடுக்கணம் சுவர்க்கம்
மலை கடல் நதி பாதாளம்
வானவர் முதலாய் உம்மை
நிலையுற படைப்ப தில்லை
என் இறை நிகழ்த்தினானே…!
கலைமறை முஹம்ம தெங்கள்
காரணம் வந்ததாலே!
நிலையுற உலகம் யாவும்
நிலைத்துமே செழித்ததுவே!
பெருமானார் பிறப்பின் நோக்கம்
பெரும் பயன் தந்ததாலே!
அருமையாய் அகிலம் எல்லாம்
அற்புதம் கண்டதாமே!
பல்லாயிரம் நபிகள் வந்தும்
பயன் ஏதும் கிடைக்கவில்லை
எல்லோரும் இறைவன் தூதர்
என்றாலும் வெற்றி இல்லை!
வல்லோனின் இறுதித் தூதர்
வள்ளல் நபி வருகையாலே
தொல்லுலகின் துயரம் நீங்கி
தொடர்மகிழ் கிடைத்தது அன்றோ!
உலகத்தின் உயிர்கள் யாவும்
உத்தமரின் வருகையினாலே
நலம் பெற்று மகிழ்ந்ததிங்கே
வளம் தந்த வாகையினாலே!
ஆலத்தின் அருட்கொடையான
அனைவோர்க்கும் பொதுநபியாலே!
சீலத்தின் செழிப்பு எல்லாம்
காலத்தால் கனிந்தது அன்றோ!
1 comment:
This is from Seerapuranam and btw who is this Abvaitaj?
Post a Comment