ரியாத்தில் தமிழக ஊழியர் மரணம் : உடலை தாயகம் அனுப்ப ரியாத்தமிழ்ச் சங்கம் உதவி
அறந்தாங்கியைச் சேர்ந்த லூர்துசாமி என்பவர் திடீர் மாரடைப்பால் 40 நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளது, அவரின் உடல் சுமேசி மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக உள்ளது, அவர் கபீலிடம் இருந்து ஓடிவந்து வெளியில் வேளைபார்த்த காரணத்தால் கபீல் அவருடைய பாஸ்போர்ட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். இக்காமாவும் கலாவதி போன்ற பிரச்னைகளால் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
விபரமறிந்த உறவினர்கள் இந்தியாவில் இருந்து என்னை தொடர்பு கொண்டு உதவும் படி கோரினார்கள், இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு எமர்ஜென்சி பாஸ்போர்ட், மற்றும் தேவையான உதவிகள் பெறப்பட்டு கேரளாவைச் சேர்ந்த சமுதாய ஆர்வலர் திரு. சிகாப் அவர்கள் மாறல் உடலை அனுப்பி வைப்பதற்குண்டான அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. என் வேண்டுகோளை ஏற்று சிகாப் அவர்கள் முழுமூச்சுடன் மும்முரமாக செயலாற்றிக்கொண்டுள்ளார், இறைவன் நாடினால் இந்த மாத இறுதிக்குள் அவர் உடலை இந்தியா அனுப்பிவிடலாம், ஊரிலும் அவர் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற விபரம் அறியப்பட்டுள்ளது.
வழக்கம் போல் இந்த பாதிக்கப்பட்ட மனிதரின் உடலை அனுப்ப தேவையாகும் செலவுகளுக்கும், குடும்பத்தினருக்கு உதவுவதற்கும் உதவிசெய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (imthias@imthias.com) தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
இம்தியாஸ் அஹமது
தலைவர்
ரியாத் தமிழ்ச் சங்கம்.
No comments:
Post a Comment