வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Thursday, May 7, 2009
துபாயில் இஸ்லாம் குறித்து அறிய உதவும் இஸ்லாமிய தகவல் மையம்
துபாயில் இஸ்லாம் குறித்து அறிய உதவும் இஸ்லாமிய தகவல் மையம்
துபாய் : துபாய் உலக நாடுகளை இணைக்கும் ஒரு வர்த்தக கேந்திரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் உலகெங்கிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகை புரிந்து வருகின்றனர்.
இங்கு வருபவர்கள் இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளவும், குறிப்பாக இஸ்லாம் குறித்த சந்தேகங்களைப் போக்கி கொள்ள உதவும் வகையிலும் தார் அல் பர் எனும் சேவை அமைப்பினால் துபாய் அரசின் ஆதரவுடன் இஸ்லாமிய தகவல் மையம் ( http://www.islamicinfodubai.com ) 1996 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.
இத்தகவல் மையம் திருக்குர்ஆனை பல்வேறு மொழிகளில் வெளியிடுதல், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோருக்கு பயிற்சி, இஸ்லாமிய அமைச்சகத்துடன் இணைந்து இஸ்லாம் குறித்து சகோதர சமுதாய மக்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் இஸ்லாம் குறித்த தகவல் வழங்குதல், கருத்தரங்கம், கண்ண்காட்சி, இஸ்லாம் குறித்த நூல்கள் பல்வேறு மொழிகளில், ஆடியோ, குறுந்தகடு உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகவல் மையத்தில் தமிழ், ஆங்கிலம், சீனா, மலையாளம், இந்தி, உர்தூ, சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூல்கள் கிடைக்கின்றன. தமிழ் மக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த தமீம் பணிபுரிந்து வருகிறார்.
இங்கு செயல்பட்டு வரும் நூலகம் பல்வேறுபட்ட மக்களையும் கவர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகமும் செயல்பட்டு வருகிறது.
மேலும் விபரமறிய தொடர்புக்கு : Tel : 04-3986950
மின்னஞ்சல் : info@islamicinfo.org.ae
இணையத்தளம் : http://www.islamicinfodubai.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment