ராசல் கைமாவில் மதுரை பல்கலை வளாகம் துவக்கம்
Thursday, 14 May 2009
துபாய், இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஐக்கிய அரபுக் குடியரசின் ராஸ் அல்கைபாவின் கல்வி நிலையங்கள் பகுதியில் தனது வளாகத்தைத் தொடங்கியுள்ளது.
பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.கற்பக குமாரவேல் இந்த வளாகத்தை சிறப்புப் பகுதியில் தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனுமதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மே மாத இறுதியில் துவங்குகின்றன.
இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ பட்ட வகுப்புகள் இந்த வளாகத்தில் அளிக்கப்படும். வணிகம், கணினி வணிகம், மேலாண்மை, சில்லறை விற்பனை, சுற்றுலா சேவை மேலாண்மை மற்றும் கணினிக் கல்வி இளங்கலைப் படிப்பின் முக்கியப் பாடங்களாகும். எம்.பி.ஏ பிரிவில் மனிதவள மேம்பாடு, சில்லறை வணிக மேலாண்மை, நிதி, உற்பத்தி மற்றும் விற்பனை மேலாண்மைப் பிரிவகளில் பாடங்கள் அளிக்கப்படும்.
ஐக்கிய அரபுக் குடியரசில் பிலானியின் பிட்ஸ், மேஸ்ரா பிட்ஸ், மணிபால் பல்கலை, மகாத்மா காந்தி பல்கலை மற்றும் எஸ்பிஜெயின் மேலாண்மைப் பள்ளி ஆகியவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment