Sunday, June 28, 2009

செய்திகளைப் படிக்க மொபைல் போன் சாஃப்ட்வேர்

செய்திகளைப் படிக்க மொபைல் போன் சாஃப்ட்வேர்


மொபைல் போனில் செய்தித் தாள்களைப் படிப்பதற்கான புதிய சாஃப்ட்வேரை எடெர்னோ இன்ஃபோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சாஃப்ட்வேர் நியூஸ்ஹன்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி செய்தி பத்திரிகைகளை மொபைல் போனில் படிக்க முடியும்.

மொபைல் போன் ஜிபிஆர்எஸ் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
பிராந்திய மொழிக்கான ஃபான்ட் வாடிக்கையாளரின் மொபைல் போனில் இல்லையென்றாலும் 'நியூஸ் ஹன்ட்' சாஃப்ட்வேர் அதைச் செயல்படுத்தும்.
எனவே சிரமம் இன்றி பிராந்திய மொழி செய்திகளையும் படிக்கலாம்.
தற்போது இந்த சாஃப்ட்வேர் மூலம் 15 ஆங்கில மற்றும் பிராந்திய மொழி செய்தித்தாள்களை படிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியைப் பெற விரும்புவோர் அதற்கான சாஃப்ட்வேரை இலவசமாகப் பெறலாம்.
இதை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியும் பெறலாம். ‘hunt’ என டைப் செய்து 57333 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இதற்கான சாஃப்ட்வேரைப் பெறலாம்.
அல்லது http://newshunt.com என்ற இணையதளத்திலிருந்தும் பெறலாம்.

மேலதிக செய்திகளுக்கு: www.mypno.com

No comments: