Wednesday, August 12, 2009

வேகம்-விவேகமாகுமா?

வேகம்-விவேகமாகுமா?
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)

இந்திய மக்களவைக்கு 5 கட்டமாக நடந்த தேர்தல் மே மாதம் 16ந்தேதி எண்ணப்பட்டு காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறும் நிலை வந்து விட்டது.சென்ற தேர்தல் முக்கியமாக கீழ்க்கண்ட கொள்கை அடிப்படையில் நடந்தது:
மத வாத கும்பழுக்கும்- மத சார்பற்ற அணிக்கும்
பொதுவுடைமைக்கும்-லிபரல் பொருதாளாரக் கொள்கைக்கும்
குழம்பியக் குட்டையில் யார் அதிகமான மீன் பிடிப்பது
ஆகிய மூன்றேயாகும் என்றால் மிகையாகாது.

நாட்டின் பிரிவினைக்குப் பின் இந்தியா மதசார்பற்ற சனநாயக நாடு என்று அறிவித்தாலும் பிரிவினையின் கசப்பினை கொஞ்சமும் குறையவிடாது பார்த்துக்கொள்வது என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்கி இந்திய புராத சின்னம் என்றும் பாராது இடித்துத்தள்ளப்பட்ட பாபரி மசூதியிலிருந்து, கோத்தரா ரயில் சம்பவம், மும்பைக்கலவரம், கோவையில் கான்ஸ்டேபிள் செல்வராஜ் கொலைக்குப் பின் நடந்த மதக்கலவர பின்னனி,
மதத்தின் பெயரால் தென்தமிழக வாழ்வுத் திட்டமான சேது சமுத்தித்திட்டத்திற்கு முட்டுக் கட்டை போடுவது, கோத்ரா புகழ் மோடிக்கு முடி சூட்டு விழா எடுக்க விரும்பும் பாரத ஜனதா அணிக்கும்-
நாட்டில் மதசார்பற்ற அரசை 5 வருடம் நடத்திக்காட்டி, உலகமே பொருளாதார பின்னடைனைவ சந்தித்த போது பொருளாதார ஸ்தரத் தன்மையினை நிலைநாட்டி விலை உயர்வை .4 சதவீதத்திற்குக் கட்டுப் படுத்தி தழிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இன்னும் இந்திய நாட்டை உலக வல்லரசாகும் என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு அறிஞர் நாஸ்ட்டர்டாம் அறிவித்ததினை நிலை நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தில் இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா தலைமையில் இருக்கும் அணிக்கும் இடையே நடந்த போட்டிதான் என்றால் மிகையாகாது. மன்மோகன் சிங் அப்பழுக்கற்ற நாணயமானவர் என்று நான் சொல்லவில்லை-மேற்கு வங்க முதல்வர்-மார்க்கிஸ்ட் பொலைட் பீரோ ழூத்த தலைவர் புத்ததேவ் பட்டார்ச்சார்யா அவர்களே சான்றிதல் வழங்கியுள்ளார்;. 2004 மக்களவை தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தபோது அனைவரும் சோனியா தான் தலைமை ஏற்று அரசை நடத்திச் செல்லவேண்டும் என்று சொன்னபோது அனைவரும் ஆட்சரியப்படும் வகையில் சோனியா மறுத்ததோடு மட்டுமல்லாமல்லாமல் மன்மோகன்சிங்கிற்கு அந்தப்பதவியினைத்தந்து 5 வருடம் இந்துத்துவாவின் ரத்தக்களரி ரத யாத்தரை இல்லாமல் நாட்டினை முன்னேற்றப் பாதையில் இழுத்துச் சென்ற பெருமை சோனியா-மன்மோகனைச்சாரும். தோல்வியடைந்ததுமே எந்தத்தலைவரும் சொல்லும் அப்பட்டமான பொய் -நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்பது தான். அதேபோல் தான் அயோத்தி புகழ்-கந்தகாரில் தீவிர வாதிகள் விடுதலை அனைத்தும் எனக்குத்தெரியாது என்றும் கபட நாகதாரி-ஜெயலலிதாவாலேயே செலக்ட்டிவ் அம்னீசியா என்று அழைக்கப்பட்ட-வருங்கால பிரதமர் கனவில் சஞ்சரித்த அத்வானி அவர்களும் அறிவித்தபோது வேண்டாம்-வேண்டாம் உங்கள் ராஜினாமா இன்னும் பல ரத்தக்காட்டேரி நிகழ்வுகள் உங்களால் நிறைவேறவேற்ற வேண்டும் என்று சொன்னதும்-ஒரு ஒப்புக்காகச் சொன்னேன் என்று சிரிப்பு நடிகர் வடிவேலின் சிரிப்பு நிகழ்ச்சியினை நிறைவேற்றி ராஜினாமாவினை திரும்பப்பெற்றிருக்கிறார். ஆனால் தேர்தல் வாக்குறிதியில் சொன்னதுபோல மன்மோகன் தான் பிரதமர் என்று 322 எம்.பிக்கள் ஆதரவு இருந்தும் சொல்பவர் வேறு யாருமில்லை-இரும்பு மனுசி இந்திராவின் அரசியல் வாரிசு சோனியாவின் உரத்த குரல்தானே விவேகம்.

ஐக்கிய முண்ணனிக்கு 2004ஆம் ஆண்டு ஆதரவு அளித்த சில கட்சிகள் அவசர கோலத்தில் ஆதரவு அளித்து விட்டு ஒரு அணு ஒப்பந்தப் பிரச்சனையினை பூதாகரமானதாக எழுப்பி ஆதரவை விலக்கக்கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் 3ஆவது அணி அமைத்த பெருமை பிரகாஷ் காரத்தைச்சாரும். முன்பிருந்த கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் இந்திய நாட்டுச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள். பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டவர்கள். மார்க்கிஸ்ட்டு தலைவர் சுர்சித் எல்லோராலும் மதிக்கப்பெற்றவர். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முண்ணனி அரசை அமைத்த பெருமை ஜோதி பாசுவுடன் சேர்ந்து பெரும். கலைஞர் எப்போது டெல்லி சென்றாலும் அவர் வீட்டிற்குச் சென்று மரியாதை செலுத்தும் அளவு சிறந்த தலைவர். அதே போன்று பாராளுமன்றத்தில் பேச்சில் கலக்கும் திறன் பெற்ற சோமானாத் சாட்டர்ஜி-இந்திரஜித் குப்தா போன்றவர்கள் கம்யூனிஸ்ட்டில் இல்லை. சோமநாத் சாட்டர்ஜி கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இப்போது சோமநாத் சாட்டர்ஜி தோல்விக்கு மார்க்கிஸ்ட் தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என குரல் எழுப்பி யள்ளார். தமிழகத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் நல்லகண்ணு தலைவராக இல்லை. மாறாக கம்யூனிஸ்ட்டிலிருந்து பிரிந்து சென்று ய+சிபிஐ என்ற கட்சியில் அஇஅதிமுகவில் கூட்டு வைத்திருந்த தா.பாண்டியன் இருக்கிறார். ஆகவே தான் மார்க்கிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரட், பாண்டியன் போன்றவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க அவருடைய வீடு நோக்கி நடந்தனர் கூட்டணி அமைக்க. அரசைச்சாட தா.பாண்டியனுக்கும், வாய்ச்சொல் வீரர் வைக்கோவிற்கும், ஐந்தாண்டு தன் மகனின் பதவி சுகத்தினை கண்டு புலகாங்கிதம் அடைந்த ராமதாசுக்கும் கிடைத்தது என்ன ஆயுதம்? இலங்கை தமிழர் பிரச்சனை. இலங்கையில் பிரச்னை உருவாக்கியது யார்? இலங்கைத் தமிழர்களா? இல்லையே! இஸ்லாமிய மக்களையும், இந்திய வம்சா வழியினரையும் அவர்கள் வாழ்ந்த கிழக்கு, மத்திய இலங்கை மாவட்டத்தை விட்டு விரட்டி விட்டுதோடு மல்லாமல் தன்னுடய முன்னாள் தோழர்களான உமா மகேஷ்வரன், பத்மனாபா, ஸ்ரீசபாரத்தினம், மாத்தையா, தழிழ் தலைவர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் லட்மணன் கதிர்காமர்; ஆகியோர்களை கொலை வெறி பிடித்து மாய்த்து தள்ளியவர்கள் தான் விடுதலைப் புலிகள். அது மட்டுமா? தமிழ் நாடு கடற்கரை மீனவர்கள் குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்யாகுமரி மீனவர்கள் இங்கிருந்து இலங்கைக்குக் கைலி, சட்டைகள், சோப்புகள் போன்றவைகவை எடுத்துச்சென்று அங்கு கிடைக்கும் கிராம்பு, ஜப்பான் நாட்டு பேண்டு பிட்டுகள், சட்டைத் துணிகள் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் விடுதலைப் புலிகள் தலை எடுத்த பின்புதான் இங்கிருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள், இஞ்ஞின்கள், டீசல், பெட்ரோல் கடத்தும் தொழிலில் ஊக்குவிக்கப் பட்டனர். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தமிழகத்தில் தங்கள் தாய் வீடு போன்று நினைத்து கடத்தல் பொருள்கள், துப்பாக்கி, வெடிகுண்டுக் கலாட்சாரம் உருவாக காரணமாக இருந்தார்கள். 1982ஆம் ஆண்டு உமா மகேஸ்வரனை சென்னை பாண்டிபசாரில் சுட்டுக் கொலை செய்ய முனைந்தவர் தான் விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன். 1983 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தை தகர்க்க குண்டு வைத்து தகர்க்க நினைத்து 32 அப்பாவி தமிழக மக்களை பலி வாங்கியவர்கள் தான் விடுதலைப்புலிகள், 1989 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் வந்த ஜீப்புகளை இராமநாதபுரம் சோதனை போட முயன்ற தமிழக காவலர் சுப்ரமணியத்தை சுட்டுக் கொன்றவர்கள் விடுதலைப்புலிகள், அதில் தப்பிப் பிழைத்தவர் தான் இன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் கே. ராதாக்கிருஷ்ணன். இந்தியா வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ்இதே நாள் 21 மே 1991 ஸ்ரீ பெரும்பதூரில், போலீஸ் எஸ்.பி. இக்பால் மற்றும் அப்பாவி 30 உயிர்களை பறித்துவர்கள் தான் விடுதலைப் புலிகள். அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் தலைவர்கள் தமிழக மக்கள் தேர்தல் சமயத்தில் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? நீங்கள் புலிகளுக்காக வக்காலத்து வாங்குகிறீர்களே தமிழாட்டில் புலிகளால் உயிர் வேட்டையாடப் பட்டவர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக இருந்திருந்தால் நீங்கள் எப்படி எல்லாம் புலம்புவீர்கள், அவர்களுக்காக ஏன் வாதாடுகிறீர்கள்? என்பதைத்தானே. ஆகவே தான் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட,; வலது கம்யூனிஸ்ட், மதிமுக தலா ஒன்றும், பாமகவிற்கு உள்ளதும் போய் நொள்ளைக்கண்ணன் கதையாகி விட்டது. அகில இந்திய அளவில் கம்ய+னிஸ்ட்டுகள் 2004ல் 33 எம்.பிக்களிலிருந்து 20 ஆகக் குறைந்து விட்டது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பான பேச்சு வார்த்தைக்கு தங்களுடைய ஆயுத பலத்தினை வைத்து இலங்கை அரசை நிர்ப்பந்தித்து தமிழ் மக்களுக்கு பல சலுகைகள் இலங்கை அரசிடம் பெற்றிருக்கலாம். ஆதை விட்டு விட்டு கோழைத்தனமாக அப்பாவித் தமிழர்களைக் கேடயமாக பயன்படுத்தி சொல்லவொன்னா இன்னலுக்கு ஆளாக்கி விட்டதோடல்லாமல் அத்தனை விடுதலைப் புலிகளும் பலியான பரிதாப நிலை வருத்தம் தராமலில்லை. ஆனால் ஆயுத வேகத்தினை மட்டும் வைத்து சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மக்களுக்கு நலமான வாழ்வு தர நினைத்திருப்பார்களேயானால் விடுதலைப் புலிகளை உலக மக்கள் பாராட்டியிருப்பனர். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் விவேகம் இல்லாததால் அவர்கள் கூண்டோடு அழிந்து விட்டனர். ஆனால் நேப்பாள மார்க்கிஸ்ட் தீவிரவாதிகள் விவேகத்துடன் நடந்து கொண்டதால் அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்து அவர்களின் தலைவர் பிரச்சான்னா பிரதமராகி, மன்னர் ஆட்சிமுறையினை அடியோடு ஒழித்த பாடத்தினையாவது தெரிந்திருந்தால் விடுதலைப் புலிகளும் அழிவைத்தேடிப் பயணம் மேற்கொண்டிருக்க மாட்டார்கள், அவர்களை போட்டிப் போட்டு ஆதரித்த தமிழக கட்சிகளும் தேர்தலில் படுதோல்வியினைச் சந்தித்திருக்காது.
பி.ஜே.பியின் முக்கிய பிரமுகராகக் கருதப்பட்ட மோடியின் அரசியல் நண்பராகவும், சரத்பாவார் பிரதமருக்குப் பொருத்தமானவர் என்று கூறிய அஇஅதிமுக தலைவி ஜெயலலிதாவை நம்பி மோசம் போனது கம்ய+னிஸ்ட்கள் மட்டுமல்ல, பதவி சுகம் காணும் ராமதாசும் தானென்றால் மிகையாகாது. பிரதமர் ஆகும் கனவில் மிதந்த சரத் பாவார் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் தேவ கவுடாவும் தானே. ஆனால் சரத் பாவார் அவர்களுக்கு கிடைத்தது வெறும் 9 இடமும், தேவ கவுடாவிற்கு வெறும் 3 இடமும் தானே கிடைத்துள்ளது. இருவருமே காங்கிரஸ் கூட்டணி அமைக்க ஒருவரோடு ஒருவர் முந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இடதுசாரிகள் ஐக்கிய முண்ணனிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த கருத்து வேறுபாட்டால் விளக்கிக் கொண்டபோது முலாயம் சிங் தலைமையிலான சமஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது. லாலு பிரசாத் யாதவ் கட்சி 2004ல் ஐக்கியக் கூட்டணிக்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் முக்கியமான ரயில்வே துறையினை திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியுடன் போட்டி போட்டு வாங்கி சிறப்பாகவும் பணியாற்றினார். ஆனால் அவருடைய வேகமான பணி தேர்தல் நேரத்தில் ஏறிய ஏணியே எட்டி மிதித்து காங்கிரஸை புறக்கணித்து பிரதமர் கனவில் மிதந்த முலாயம் சிங், ராம்விலாஸ் பாஸ்வானுடன் கூட்டுச் சேர்ந்து நான்காவது அணி அமைத்துப் போட்டியிட்டார். என்ன நடந்தது வெறும் மூன்று இடங்கள் தான் பெற்றார் லாலு, 36 எம்.பிக்கள் கொண்ட முலாயம் 23 இடங்களையே பெற்றார், தலித் பிரதமர் கனவில் மிதந்த பாஸ்வானுக்கு வெறும் நாமம் தான் மிச்சம். அதளுனால் முலாயமும், லாலுவும் தாங்களாகவே முன்வந்து காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க ஜனாதிபதியிடம் கடிதங்கள் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் காலங்காலமாக முஸ்லிம்கள் பெருவாரியாக முஸ்லிம் லீக் மூலம் தி.மு.க, அஇஅதிமுக என்று மாறி மாறி கூட்டணி அமைத்துப் போட்டி போட்டு வந்துள்ளனர். 1995 ஆம் ஆண்டு த.ம.மு.க என்ற அமைப்பை ஜெயினுலாபுதின், எஸ்.எம். பாக்கர், கைதர் அலி, ஜவகரில்லா போன்றவர்கள் ஆரம்பித்து இளைஞர்களிடையே ஒரு எழிச்சியினை ஏற்படுத்தினர். மக்கள் சேவை என்றிருந்தால் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களை பாராட்டிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய வழிபாடு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாகச்சொல்லி, பள்ளிக்குத் தொழுகை செல்லும்போது தலையில் தொப்பி அணியத் தேவையில்லை, தொழுகை முடிந்து அல்லாவிடம் நன்றி செலுத்தும் துவா அவசியமில்லை பாதியில் எல்லோரையும் மிதித்துக் கொண்டு எழுந்து செல்லலாம், தொழுது கொண்டு இருக்கிறவர்கள் கவனத்தினை திசை திருப்பும் வகையில் ‘அத்தகியாத்து ஓதி முடிந்ததும் ஆள்காட்டிவிரலை ஆட்டிக்கொண்டேயிருப்பது, பள்ளியில் தங்களுக்கெனத் தனித்தொழுகை, லாகிரிப் பொருளை உபயோகிப்பது தவறில்லை போன்றன பொரும் பாலான முஸ்லிம் மக்களிடம் எதிரப்புக் கிளம்பியது. இந்தச்சமயத்தில் 1998ஆம் ஆண்டு கோலையில் நடந்த மதக்கலவரத்தினைக் காட்டி வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம் பெருமக்களிடம் வசூல் செய்த தொகையினை கையாழும் முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று அணியாகப் பிரிந்து செயல் பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மற்றும் பல இடங்களில் சொத்துக் கையாளு முறையில் ஏற்பட்ட சண்டை கைகலப்பில் முடிந்து காவல் நிலையம் வரை சென்றது அனைவரும் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்.
2006 சட்டசபைத் தேர்தலில் த.மு.மு.க அமைப்பு தி.மு.கவிற்கும், தவ்கீது அமைப்பு அஇஅதிமுகவிற்கும் ஆதரவு தெரிவித்தது. அதில் தி.மு.க அணி வென்று ஆட்சிப் பொருப்பேற்றதும் கைதர் அலிக்கு வக்போர்டு தலைவர் பதவி மந்திரிக்கு சமமானப் பதவி கொடுத்தார்கள். கிராமங்களில் ஒரு பழபொழி சொல்வார்கள் அர்ப்பனுக்கு கோழி இறகினை தலையில் கட்டினால் அதனை தனக்குச் சூட்டிய கிரீடம் என்றும், தன்னை ராஜாவாக நினைத்து ஆட்டம் போடுவானாம். அதே போன்று பதவி கிடைத்ததும் பள்ளிவாசல் நிர்வாகங்களில் தலையிட்டுக் குழப்பம் ஏற்பட வழிவகை செய்யப்பட்டது. மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தில் 18 வயதுக்குட்பட்டவர் அனைவருக்கும் ஓட்டுப்போட உரிமை உண்டு என்பதை பள்ளிவாசல் நிரவாகத்திலும் நுழைத்து தன் ஆதரவாளர்களை நிரவாகக் கமிட்டியில் நுழைய வழி வகுத்தனர். ஆனால் இஸ்லாத்தில் திருமணமாகாது இருக்கக்கூடாது அனைத்து மக்களும் திருமணம் செய்து குடும்ப வாழ்கைக்கு வழிவகுத்தது. ஆகவேதான் அனைத்து திருமணம் செய்த மக்களுக்கும் ஜமாத்து உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அதற்கு மாற்றம் வக்போர்டு மூலம் கொண்டு வரப்பட்டது. அது மட்டுமல்லாமல் உறுப்பினர்கள் அந்த வார்டுக்குள் இருப்பவர்கள் மட்டும் தான் ஓட்டுப்போட வேண்டும் என்றும் உத்திரவு போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இதனை எதிர்த்துக் கேட்ட இளையான்குடியினைச்சார்ந்த ஓய்வு பெற்ற பேங்க் அதிகாரி ரபீக் தாவ+த் வக்ப் தலைவரால் மரியாதைக் குறைவாக பலர் முன்னிலையில் நடத்தப்பட்டார் என்று அவரே என்னிடம் குறைபட்டுக் கொண்டார். அதேபோல் அய்மான் மெயிலில் ஒரு சகோதரர் கூத்தாநல்லூர் பெரிய பள்ளியில் புது நிரவாகத்தினை நிறுவிக் குழப்பத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் வக்ப்போர்ட் சேர்மன் ஈடுபடுவதாக அழாதக் குறையாக சொல்லிருந்தது அனைத்து அய்மான் உறுப்பினர்களும் அறிந்ததே. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்த அனைத்து ஜமாத்தாருக்கும் 2009 மக்களவைத் தேர்தல் வடிவில் ஒரு விடிவுகாலம் வந்தது. த.மு.மு.க ஒரு அரசியல் கட்சியாக 2009 பிப்ரவரி மாதம் பிரகடனப்படுத்தி ம.நே.ம.க என்றும் பெயர் சூட்டப்பட்டது. பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அதன் தலைவர் தி.மு.க தங்கள் கட்சிக்கு 3 எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி தாங்கள் தான் என்றும் அறிவித்து அதுபோல அங்கீகாரம் தராவிட்டால் மாற்று அணிக்குச் செல்ல விரும்புவதாகவும் சொன்னது அனைவரும் அறிவர். இந்த அறிவிப்பு தோழமைக்கட்சியான தி.மு.கவையே முகம் சுழிக்க வைத்தது. வேதாளம் முருங்கை மரத்திலிருந்து இறங்கினால் போதும் என்று திமுகவும், எதிர் அணி எப்போதுமே மதசார்பானக் கொள்கையினைக் கொண்டுள்ளதால் அவர்களும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் கிடைத்தார் புதிய தமிழக கட்சியினுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட முஸ்லிம்கள் நிறைந்த சேப்பாக் தொகுதியில் முன்னாள் வக்ப் போர்டு தலைவர் கைதர் அலிக்குக் கிடைத்த ஓட்டு வெறும் 13,160 ஓட்டுக்களே. அந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 6,10,352 ஓட்டுக்கள். அதேபோல மயிலாடுதுரையில் போட்டியிட்ட அடுத்தத் தலைவர் ஜவகரில்லாவிற்கு பதிவான 7,99,586 ஓட்டுக்களில் வெறும் 19,814 ஓட்டுக்களே கிடைத்துள்ளது. இவரகள் கூட்டணி மூலம் பயனடைந்தது புதிய தமிழக டாக்டர் கிருஷ்ணசாமிதானே-ஏனென்றால் அவர் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் உள்ள த.ம.மு.கவினர் போட்ட ஓட்டால் அவர் ஒரு லட்சம் ஓட்டுக்கு மேல் பெற்றுள்ளார. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பிடிப்பு உள்ள புதிய தமிழக கட்சிக்கொடியினை சென்னை போன்ற மாநகரிலும் எடுத்துக் கொண்டு அவருக்கு ஒரு முகவரிக் கொடுத்த பெருமை மனித நேயக்கட்சியைச் சேரும் என்றால் மறுக்க முடியாது. ஆகவே தான் வீனான வேகம் காட்டாமல் விவேகத்துடன் நடந்து கொண்டிருந்தால் இன்று 3 முஸ்லிம் எம்.பிக்களை ஹாருன், அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து பெற்று முஸ்லிம் மக்களுக்காக பணியாற்றியிருக்கலாமே!
இப்பவும் காலம் வீணாகவில்லை. நான் முன்பொரு கடிதத்தில் ஒன்று பட்டால் ஒன்று வாழ்வு என்று கூறியது முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் தலைவர்கள் ஓர் அணியில் திரண்டு 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பெறும் பாலான இஸ்லாமிய மக்களின் அவா ஆகம். அதற்கு அனைத்துத்தலைவர்களும் ஆவன செய்ய வேண்டும்.
அவவ்வாறு அவர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 10க்குக் குறையாத எம்.எல்.ஏக்களைப் பெற்று கீழ்க்கண்ட முஸ்லிம் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு முனைப்புடன் செயலில் இறங்க வேண்டும்:
முஸ்லிம் மைனாரிட்டி எம்பவர்மெண்ட் போர்டை உருவாக்கி முஸ்லிம் மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும்
அந்த மைனாரிட்டி போர்டின் தலைவராக தன்னலமற்ற முஸ்லிம் தலைவரை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
அரசில் பங்கு கேட்டு இரண்டுக்குக் குறையாத மந்திரிகளை கேட்டுப் பெறவேண்டும்.
அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பங்கினை வெள்ளை அறிக்கையாக பெற்று 3.5 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் அந்த இடங்களுக்கு முஸ்லிம்களையே போட முறையிட வேண்டும்.
பின் தங்கிய மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ரூரல் தொழிற்சாலைகளைத் தொடங்க வழிவகை செய்ய வேண்டும்.
கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் தொழில் கலவிக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் தொழில் தொடங்கவோ அல்லது உயர் கல்விகற்கவோ லோன்கள் கொடுககும் வங்கிகளை உருவாக்க வேண்டும்.

From: Mohamed Ali

No comments: