அன்புமிக்க சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்கள் மூலம் அனுப்பப்பட்ட மும்பை சரவணா அவர்களின் மொபைல் குர்ஆன்
பற்றிய மெயில் பார்த்தேன். நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் சிறிய இளம் வயதில்
குர்ஆன் கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அதை தொட்டிருப்பார்கள். அதற்கு பின்
குர்ஆனின் பக்கம் திரும்பிக்கூட பார்த்திருக்காத நமது சகோதரர்களுக்கு மத்தியில்,
மாற்றுமத சகோதரர் சரவணா அவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன். அல்லாஹ்
அவருக்கு இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்ட துஆச் செய்கிறேன்.
அவர் டைப் செய்து (சாம்பிள்) மாதிரி அனுப்பிய வசனத்தில் அச்சுப்பிளைகள்
உள்ளன. வார்த்தைகள் விடுபட்டுள்ளன. மேலும் வசனங்களின் இடையில் வரும் நிறுத்தக்-
குறிகள் ஆயத்துக்களுடன் (வசனங்களுடன்) இணைக்கப்பட்டு நிறுத்தல் குறிகளின் அடையா-
ளம் தனியாக தெரிவதில்லை. திருக்குர்ஆன் தவறாக டைப் செய்யப்பட்டு பரப்பப்படுவதிலி-
ருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எனவே தங்களுக்கு வரும் இது போன்ற மெயில்களை மற்றவர்களுக்கு அனுப்பும்
முன், தாங்கள் ஆலிம்களிடம் ஆலோசனை பெற்றுச் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
தங்களன்புள்ள,
மவ்லவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி.
Saravana Rajendra
seeninainar@gmail.com,
Jamal Mohamed
dateMon, Apr 12, 2010 at 8:09 AM
subjectRe: Fwd: மொபைல் குர்ஆனில் அச்சுப்பிழை
அன்புள்ள பெரியவர்களுக்கு வணக்கம்,
நான் அனுப்பிய மாதிரி திருத்தபடாது, முக்கியமாக இடையில் வரும் எழுத்துக்களை எப்படி அடையாளமிட என்று தெரியாமல் " " குறிகளை பயன்படுத்தி இருக்கிறேன்.
ஆனால் அவை வேண்டாம் என்று கூறிவிட்டனர். நல்ல வேலை நான் இந்த குறியீடுகளை பயன்படுத்தி இருப்பதால் வேர்டில் பேஸ்ட் செய்து வார்த்தைகளை எடிட் செய்ய எளிதாக ஆகிவிட்டது.
ஆனால் பலரிடம் இது குறித்து பேசியும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை, ஒவ்வொரு ஸுராவாக
எழுத்து பிழை பார்த்தாவது கொடுங்கள் என்று , அனைத்து ஸுராக்களையும் தனியாக எடுத்து தனித்தனி பைலாக செய்து கொடுத்து பார்த்தேன்,நெரமில்லை என்றுதான் பதில் வருகிறது.
மும்பையில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் தொடர்பு எண் தரவும் நான் எழுதிய அனைத்தையும் கொடுத்து பிழை திருத்தி கொள்ள ஏதுவாக இருக்கும் ,
இணைப்பை பார்க்கவும் இந்த குறியீடுகள் மிகவும் முக்கியமானவை ஆனால் நான் எழுதும் எழுத்து பலகையில் இந்த எழுத்துகளை எப்படி அமைக்க என்று தெரியவில்லை, அதனால் இந்த குறியீடுகளை
பயன்படுத்தி இருக்கிறேன்.
இதற்கான யோசனைகள் யாராவது சொன்னால் மாற்றி அமைக்கிறேன்
நன்றி,
(நீங்கள் மாற்று மதம் என்று சொல்லி இருந்தீர்கள், முதலில் நான் ஒரு மனிதன், பிறப்பால் எனது தந்தை எந்த மதமோ அந்த முகமூடி என்னை கேட்காமல் என்னிடம் ஒட்டிக்கொண்டது) நான் மும்பையில் அலைபேசி குர் ஆன் குறித்து பேசினால் முதலில் எனது பெயரை கேட்பார்கள், சரவணா ராஜேந்திரன் என்று நான் சொன்ன பிறகு அவர்கள் முகத்தில் ஒரு மாற்றம் தோன்றும்
நன்றி,
அன்புடன்
சரவணா ராஜேந்திரன்
மும்பை
09819166850
From: Saravana Rajendra
Date: 2010/4/2
[Attachment(s) from Saravana Rajendra included below]
அன்பு நன்பர்களுக்கு வணக்கம், சரவணா மும்பையில் இருந்து
கடந்த 2009- மே-22 -ல் இருந்து அலைபேசியில்(மொபைல்) திருகுர்ஆன் அரபியில் எழுத ஆரம்பித்து நேற்று 31-மார்ச் 2010 காலை இறுதி ஸுராத்துந் நாஸ் மக்கி (வசனம்) ٦.مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ (இத்தகையோர்) ஜீன்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். என்ற வசனத்துடன் முடித்துவிட்டேன்.
இவை 1979- வெளிவந்த திருகுர்ஆன் புத்தகமாக லிட்டரி அண்ட் சாரிட்டபுள் டிரஸ்ட் மூலம் முனைவர் எஸ் ஹாஜி முஹம்மது ஜான் வெளியிட்ட ஐந்தாம் பதிப்பை பார்த்து எழுதப்பட்டது
ஐந்தாம் பதிப்பு புத்தகத்தில் உள்ளது போன்றே முழுக்க முழுக்க எழுதியுள்ளேன்.
ஆயத்து நிறைவு பெற்றதை குறிக்கும் O நிறுத்தற் குறிகள் முதல் م ,ط ,ج ,ز ,ص ,ق ,لا, قف ,س ,سكت, صل ,صلى ,ك போன்ற குறியீடுகளை பயன்படுத்தி இருக்கிறேன்.
(٢٥. وَبَثِّرِالَّذِيْنَ اَمَنُوْا وَ عَمِلُوا الصَّلِحَتِ اَنَّ لَهُمْ جَنَّتٍ تَجِرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهَرُ (ط) كُلَّمَا رُذِقُوْا مِنْهَا مِنْ تَمَرَةِ رِّزقًا (لا) قَالُوْا هَذَا الَّذِىْ رُزِقُنَا مِنْ قَبْلُ (لا) وَاُتُوْا نِهِ مُطَهَّرَةٌ لا ق وَّهُمْ فِبْهَا خَلِدُوْنَ )
ஸுரா அல்ஃபாத்திஹா எழுத ஆரம்பித்த நாள் முதல் நேற்றுவரை யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை, எனக்கு அரபி எழுத படிக்கத்தெரியும் என்பதால் நானே விருப்பட்டு ஆர்வத்தில் எழுத துவங்கினேன். இடையில் சில சந்தேகங்கள் வரும் போது இன்குலாப் ஆசிரியர் திரு இக்பால், மற்றும் என் எஃப் டி டி யில் ஆசிரியராக பணிபுரியும் பதரே ஆலம் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு வந்தேன்.
அரபி தமிழ் குரான் புத்தகத்தை பார்த்து முழுக்க முழுக்க எழுதி முடித்து விட்டேன்.
காராணம். 1996 12-ம் வகுப்பு தமிழகத்தில் முடித்து விட்டு மும்பை வந்த காலத்தில் கோவண்டியில் தங்கி இருந்தோம். கோவண்டியில் இருந்து தினமும் ரூயா கல்லூரி செல்லும் போது என்னுடன் பயணம் செய்யும் பல இஸ்லாமிய தோழர்கள் சிறிய ஸுரா கையேடு(புத்தகம்) எகா அல் ஃபதா, லுக்மான், அல் ஃக்மார், அ- அதூஹா, அல் ஸஹார, அல் அஸர் மற்றும் இதர மாவுன், கவஹாதர் போன்ற ஸுராக்களும், முக்கிய ஆயத்துகளையும் படித்து கொண்டு செல்வார்கள். அவர்களது அந்த சிறிய புத்தகங்கள் வாங்கும் பொழுது புதியதாக இருக்கும், தினமும் இவர்கள் பயன்படுத்துவதால், சில மாதங்களிலேயே அதன் நிலை 5 வகுப்பு படிக்கும் குழந்தையின் நவம்பர் மாத தமிழ் புத்தகம் போல் ஆகிவிடும்.
இதே போல் தான் இந்து சகோதரர்களில் ஹனுமான் சாலீஸா, இதர மத வழிப்பாட்டு புத்தகங்கள்,
2006 எனக்கு இது போன்ற புத்தகங்கள் எஸ் எம் எஸ் போல் மொபைலில் படிக்க முடியாதா என்ற கேள்வி எழும்பியது.
அதன் பலனால் 2009-ல் வாங்கிய சைனா மொபைலான ஜி 5 என்ற மொபைலில் முதல் முதலாக நான் எழுதும் புத்தகங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் அறிந்து கொள்ள கணனியில் உள்ளவற்றை மெபைலில் பதிவு செய்து மின்சாரம் இல்லாத நேரங்களிலும், வழிப்பயணத்தின் போதும், கணனி மக்கர் செய்த போதும் படிக்க ஆரம்பித்தேன், இதனை அடுத்து பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத்தில் மட்டும் மாடல் கேள்வி பதில் எழுதி அவர்களுடைய மொபைலில் பதிவு செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.
இந்த நேரத்தில் என்னுடைய 15 வருட த்திற்கு முன்பு தோன்றிய மத வழிப்பாட்டு புத்தங்கள் படிப்பதற்காக மொபைல் புத்தகம் உருவாக்கும் எண்ணம் வர முதலில் தாவோயிஸ வசணங்கள் எழுத ஆரபித்தேன்.(மொபைலில் ஆங்கிலம் தெளிவாக தெரிய வருகிறது,) அரபி, ஹிந்தி, மராட்டி, குஜராத்தி போன்றவை திரை சிறியதாக இருப்பதால் குறியீடுகள் இடமாறி வரும். நோக்கியா, எல் ஜி, சாம் ஜூங் போன்றவையில் தெளிவாக தெரியும்.
எழுதியது எப்படி,
1,பிசி போன் என்ற அரபி எழுது பலகை மூலம் ஒவ்வொரு ருகூஃ எழுதினேன்.
2, ஒவ்வொரு ஸுராவிற்கு ஒரு ஃபோல்டர்,
3,ஒவ்வொரு ருகூஃ எழுதிய பிறகு அதை கூகில் டிரான்ஸ்லேட்டரில் கொண்டு அரபி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது தவறான வார்க்தைகள் மூல மொழியான அரபியிலேயே வரும் அதை கொண்டு ஓவ்வொரு வசனங்களும்(மக்கீ) பிழை சரி செய்தேன்.(இதற்காக நான் தக்கலை ஜமால் ஐயா அவர்களுக்கும் அவர்களது புதல்வருக்கும் நன்றி கூற கடமைபட்டு இருக்கிறேன்.கடந்த வருடம் ஜூன் முதல் தேதி அன்று தக்கலையில் அவர்களது இல்லாது உறையாடிக்கொண்டு இருக்கும் போது இதற்கான ஆலோசனை அந்த உரையாடலின் மூலம் கிடைத்தது.
இதற்காக நான் எந்த ஒரு கட்டணமும் இது வரை நிர்ணயிக்க வில்லை.
மும்பையில் புரூப் ரீடிங்(பிழை திருத்தம் இருக்கிறதா) என்ற பார்க்க சிலரிடம் கொடுத்து இருக்கிறேன்.
அது வந்த பிறகு மே முதல் தேதியில் இருந்து எம் எம் எஸ் மூலமாகவும் , மும்பையில் இருந்தால் புளூடூத் தொழில் நுட்பம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளாம்.
ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வசனமாக எழுதி கொண்டு இருந்தேன். அல் பகரா முடிக்கும் முன்பே எழுதும் வேகம் கூடிவிட்டது. ஜனவரியில் இருந்து பல இரவுகள் விழித்து இருந்து ஒரு நாளைக்கு 50 ஸுரா வரைக்கும் எழுதி தற்போது முடிவிற்கு வந்து விட்டது.
இதை எழுத துவங்கிய காலம் முதல் முடியும் காலம் வரை பல இன்னல்கள் , சிக்கல்கள் வந்தது அனைத்தையும் வெற்றிகரமாக சந்தித்து, முடித்துவிட்டேன்.
سُِوْرَ ةُ النَّاسِ ع مَكِّيَّتٌدوَّهِىَ ء‘ سِتُّء‘ايًا تَ
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
O
١. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
لاO
٢. مَلِكِ النَّاسِ
لاO
٣. إِلَهِ النَّاسِ
لاO
٤. مِن شَرِّ الْوَسْوَاسِ ٥لا الْخَنَّاسِ
ص لاO
٥. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
لاO
٦. مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
عO
நன்றிகள்,
திரு டேவிட்\ இளங்குமரன் ஐயா, இவர் இல்லை என்றால் மொபைல் குர்ஆன் என்னால் உருவாக்கி இருக்க முடியாது.
திரு இளங்கோ பஹரினில் பிரபல மருந்து நிறுவனத்தில் தலைமை அதிகாரி,
திரு பாலச்சந்தர் ஆறுமுகம் மற்றும் அவரது துணைவியார்(பஹரீன்),
திரு தாமஸ் ஐயா(முன்னால் செயின்ட் சேவியர் காமஸ்ர்ஸ் துறைத்தலைவர் 2009 வரை
திரு இக்பால் (இன்குலாப் நாளிதழ் மும்பை)
திரு பதரே ஆலம் (என் எஃப் டி டி ஆசிரியர்)
மற்றும் பிஸி போன் மென்பொருள் அறிமுகபடுத்தியவர் (இவர் ஒரு ஜெர்மானியர்) பலமுறை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டேன். பதில் வரவில்லை.
---------------------------------------------------------------------------------
இந்த குர்ஆன் படிக்க அரபி மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
ஜாவா மொபைல் அகன்ற திரை கொண்டவை
பைலின் அளவு வெறும் 1.21 M
புரூப் ரீடிங் முடிந்த பிறகு சிறிய அளவில் குறையவோ கூடவோ இருக்கலாம்.
இணைய இணைப்பு எதுவும் தேவை இல்லை என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது. (நான் இதை எழுதியதன் நோக்கங்களில் ஒன்று இணைய இணைப்பு இல்லாமல் இதை படிக்க வேண்டும் என்பதுதான்)
வசனத்தின் எண்கள் கூட அரபியில் எழுதியுள்ளேன்
எம் எம் எஸ், மற்றும் புளூ டூத் வசதியின் மூலம் பெற்றுக்கொள்ளாம்.
உங்கள் மொபைலில் சிறப்பு மெண்பொருள் எதுவும் ஏற்றத்தேவை யில்லை.
நீங்கள் எஸ் எம் எஸ் படிப்பது போன்றே மொபைல் குர்ஆன் வாசிக்கலாம்.
மேலதிக விளக்கங்களுக்கு 09819166850, 09029512535 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment